Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தல' டோணிக்கு இந்த ஆண்டு காதலர் தினம் கிடையாது

சென்னை: கேப்டன் டோணிக்கு இந்த ஆண்டு காதலர் தினம் கிடையாது.

உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 15ம் தேதி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

No Valentine's day for Dhoni this year

இந்த போட்டியை நினைத்து ரசிகர்களைப் போன்றே இரு அணி வீரர்களும் டென்ஷனாக உள்ளனர். அதிலும் டோணிக்கு ஏகப்பட்ட டென்ஷன். உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதே இல்லை. இந்த முறையும் வீழ்த்தவிடக் கூடாது என்பதில் டோணி முனைப்பாக உள்ளார்.

இந்நிலையில் காதலர் தினம் வந்துள்ளது. டோணியின் காதல் மனைவி சாக்ஷி இந்தியாவில் உள்ளார். கடந்த 6ம் தேதி பெண் குழந்தையை பெற்றுள்ள சாக்ஷியால் ஆஸ்திரேலியா செல்ல முடியாது. அதனால் இந்த ஆண்டு டோணி, சாக்ஷியால் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாட முடியாது.

ரசிகர்களே காதலர் தினத்தை விட இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நினைத்து நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் கேப்டனான டோணிக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும்.

டோணி தனது குழந்தையை இன்னும் பார்க்கவில்லை. தேசிய பணி தான் முக்கியம் மற்றவை எல்லாம் அப்புறம் தான் என்று தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 13, 2015, 19:15 [IST]
Other articles published on Feb 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+