Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியுடன் சண்டை போட்ட வீரரின் பரிதாப நிலை.. ஆசியக் கோப்பைக்கு கூட தேர்வாகவில்லை.. ரசிகர்கள் கலாய்!

மும்பை: ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியுடன் மல்லுக்கு நின்ற ஆஃப்கான் அணி வீரர் நவீன் உல் ஹக் ஆசியக் கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் கூட தேர்வு செய்யப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான இளம் வீரராக உருவாகியவர் நவீன் உல் ஹக். விராட் கோலியுடனான மோதல், கேஎல் ராகுலின் பேச்சை கண்டுகொள்ளாதது, ரசிகர்களை பார்த்து சைலன்ஸ் சிக்னல், மாம்பழங்களுடனான கொண்டாட்டம், கேஎல் ராகுல் ஸ்டைலில் கொண்டாட்டம் என்று ரசிகர்கள் மறக்கவே முடியாத அளவிற்கு சர்ச்சைகளில் சிக்கினார்.

No Virat Kohli vs Naveen Ul Haq War in the Asia Cup 2023

என்னதான் சர்ச்சைகளில் சிக்கினாலும் 8 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் பிரஷரான சூழல்களிலும் சிறப்பாக செயல்பட்டார். அதேபோல் அண்மையில் வைடாலிட்டி பிளாஸ்ட் தொடரில் பங்கேற்ற நவீன் உல் ஹக் 5 போட்டிகளில் 4 விக்கெட்டிகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிபிஎல், பிக் பாஷ், வங்கதேச பிரீமியர் லீக் என்று அனைத்து டி20 லீக்களிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர். ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நவீன் உல் ஹக் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டதால், ஆசியக் கோப்பைத் தொடரின் போது விராட் கோலி - நவீன் உல் ஹக் இடையிலான போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆசியக் கோப்பைக்காக ஆஃப்கானிஸ்தான் அணி தேர்வு செய்துள்ள 17 பேர் கொண்ட வீரர்களில், நவீன் உல் ஹக்கின் பெயர் இல்லை. இதற்கு சரியான காரணமும் அளிக்கப்படாததால், நவீன் உல் ஹக் விரக்தியில் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், எவ்வளவு தான் உங்களின் கண்கள் இருளுக்கு பழகியிருந்தாலும், ஒருநாளும் அதனை ஒளி என்று நினைக்க மாட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நவீன் உல் ஹக்கின் பதிவு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவினை பகிர்ந்து விராட் கோலி ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோல் விராட் கோலி - நவீன் உல் ஹக் யுத்தத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் பலரும் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Sunday, August 27, 2023, 22:53 [IST]
Other articles published on Aug 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+