நியூசிலாந்து முதல் டெஸ்ட்.. புஜாரா தேர்வு செய்த பிளேயிங் XI.. வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் வேண்டாம்
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஜாம்பவான் வீரரான புஜாரா தேர்வு செய்துள்ளார். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஆல்ரவுண்டர் என்று புஜாரா தேர்வு செய்துள்ள அணியில், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் இந்திய அணி செயல்பட தீவிர முனைப்புடன் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய ஜாம்பவான் புஜாரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன்பின் நம்பர் 3 பேட்ஸ்மேனாக தேவ்தத் படிக்கல் விளையாட வேண்டும். இலங்கை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இருந்தார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றார். இதன்பின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக கேப்டன் சுப்மன் கில்லும், நம்பர் 5ல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து நம்பர் 6 பேட்ஸ்மேனாக வாஷிங்டன் சுந்தர் அல்லாமல் துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல் வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் நம்பர் 7ல் ஜடேஜாவை தேர்வு செய்ய வேண்டும் என்றும், நம்பர் 8ல் நிதிஷ் குமார் ரெட்டியையும் தேர்வு செய்துள்ளார்.
அதேபோல் 3 வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் பெஞ்ச் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். கடந்த முறை நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இருப்பினும் அவரை தேர்வு செய்யாதது விவாதமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
