சிறந்த பினிஷர் தோனி தான்.. தோனியின் தைரியம் மற்றவர்களுக்கு வராது.. முன்னாள் ஆஸி. வீரர் அதிரடி
மெல்போர்ன் : இந்திய அணியின் மூத்த வீரர் தோனி கடந்த வருடத்தில் சரியாக பேட்டிங் செய்யாமல் இருந்தார். எனினும், கடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.
முன்பு சிறந்த பினிஷர் என அறியப்பட்ட தோனி, அதை கடந்த சில மாதங்களில் இழந்து இருந்தாலும், மீண்டும் தோனி பினிஷராக வந்துவிட்டார் என கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சாப்பல்.

பினிஷர் இல்லை
தோனி ஆஸ்திரேலிய தொடரில் மூன்று அரைசதங்கள் அடித்து இருந்தாலும், அவரது பேட்டிங்கில் பழைய அதிரடி இல்லை. தோனி ஒரு பொறுப்பான பேட்ஸ்மேனாக இருக்கிறாரே தவிர பழைய தோனியாக, ஒரு பினிஷர் இல்லை என சிலர் கூறினர்.

தோனியின் பலம்
இந்த நிலையில், இயான் சாப்பல் நேரடியாகவே தோனி மீண்டும் சிறந்த பினிஷராக வந்துவிட்டார் என கூறியுள்ளார். மற்றவர்கள் எதை தோனியின் குறைபாடாக பார்க்கிறார்களோ, அதை தோனியின் பலமாக பார்க்கிறார் சாப்பல்.

தோனியின் தைரியம்
தோனி கடைசி நேரத்தில் பந்துகளை வீணடித்து கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்துச் செல்வதை மற்றவர்கள் விமர்சித்தாலும், சாப்பல் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு செல்லும் தைரியம் மற்ற வீரர்களுக்கு வராது என கூறியுள்ளார்.

கடைசி நேர வெற்றி
பல முறை அதிக தூரம் இந்த போட்டி சென்று விட்டது. இனி ஜெயிக்க முடியாது என நான் நினைக்கும் போது அவர் இரண்டு அதிரடி ஷாட்கள் ஆடி வெற்றியை தேடிக் கொடுத்து விடுவார் என கூறியுள்ளார் சாப்பல்.


Click it and Unblock the Notifications