அவுட் ஆகறத பத்தியெல்லாம் கவலைப்படறதில்ல... ப்ரெஷ்ஷா பீல் பண்றேன்.. உற்சாக தவான்!
துபாய் : நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது தொடர் சதத்தை பூர்த்தி செய்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் சாதனை புரிந்துள்ளார்.
அவரது முயற்சி சரியான பலனை கொடுக்கவில்லை. மாறாக டெல்லி அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில் அவுட் ஆவது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் வேகமாக ஓடுவதாகவும் ப்ரெஷ்ஷாக உணர்வதாகவும் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

வீணான சாதனை
இந்த ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஷிகர் தவான், தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்து ஐபிஎல்லில் இந்த சாதனையை புரிந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய அவரது அதிரடி வீணாகியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

ஷிகர் தவான் அதிரடி
தொடரின் ஆரம்பத்தில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத தவான், கடந்த சில போட்டிகளில் தன்னுடைய அதிரடியை நிரூபித்து வருகிறார். இந்நிலையில், அவுட் ஆவது குறித்தெல்லாம் தான் கவலை கொள்வதில்லை என்றும் வேகமாக ஓடுவதாகவும் பிரெஷ்ஷாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரன்கள் மட்டுமே நோக்கம்
இதுவரை இரண்டு சதங்களை மட்டுமின்றி இரண்டு அரைசதங்களையும் இந்த சீசனில் அடித்துள்ளார் தவான். இந்நிலையில் தன்னுடைய மனநிலையில் மிகவும் பாசிட்டிவ்வாக வைத்து கொள்வதாகவும் ரன்கள் அடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு விளையாடுவதாகவும் பிட்ச் குறித்து கவலை கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னம்பிக்கை கிடைத்துள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான அடுத்தடுத்த போட்டிகளில் இவர் சதமடித்துள்ளார். இந்நிலையில் தன்னை உடலளவிலும் மனதளவிலும் தயார் படுத்திக்கொள்ள தனக்கு போதிய அவகாசம் கிடைத்ததாகவும் தவான் குறிப்பிட்டுள்ளார். அடித்து ஆட ஆரம்பித்தவுடனே தன்னம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications