Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த நாலு போட்டோவை பாருங்க.. இப்போ சொல்லுங்க யார் மேலே தப்புன்னு.. பழிபோடும் ரூட்.. கோலி பதிலடி

சென்னை: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைய பேட்ஸ்மேன்களின் மோசமான டெக்னிக்தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிந்தது சர்ச்சையாகி உள்ளது. பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததாக புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிட்ச்தான் காரணம் என்று சிலர் புகார் வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த புகார்களுக்கு தற்போது தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

மோசம்

மோசம்

அதன்படி இரண்டு நாள் ஆட்டத்தில் விழுந்த 30 விக்கெட்டில் 21 விக்கெட்டுகள் நேராக வந்த பந்து மூலமே விழுந்துள்ளது. பந்து ஸ்விங் ஆனதால் விக்கெட் விழவில்லை .அப்படி இருக்கும் போது இதை ஸ்பின் பிட்ச் என்று கூறி தேவையில்லாத புகார்களை வைக்க கூடாது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

போட்டோ

போட்டோ

இதற்காக இணையத்தில் இவர்கள் 4 போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் இங்கிலாந்து வீரர்கள் எப்படி பந்தை மிஸ் செய்கிறார்கள். நேராக வரும் பந்தை கணிக்காமல் எப்படி மிஸ் செய்கிறார்கள் என்று காட்டப்பட்டுள்ளது.

தவறு

தவறு

காலுக்கும் பேட்டிற்கும் இடையில் எவ்வளவு இடைவெளி விடுகிறார்கள் என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பிட்ச் என்பதை விட பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம்தான் காரணம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

புகார்

இந்த நிலையில் இந்த பிட்ச் மோசமாக இருக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் ரூட் குறிப்பிட்டு இருந்தார். இந்த பிட்ச் பேட்டிங் செய்ய கஷ்டமாக இருந்தது. இதில் நாங்கள் கருத்து சொல்ல முடியாது, ஐசிசிதான் இதில் தக்க முடிவு எடுக்க வேண்டும் என்று ரூட் குறிப்பிட்டு இருந்தார்.

பதிலடி

பதிலடி

இதற்கு கோலி கொடுத்த பதிலடியில், பிட்ச் மோசமாக இருந்தது என்று சொல்ல முடியாது. இந்திய பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்தனர். முதல் இரண்டு நாட்கள் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலைதான் இருந்தது. அதிலும் 30 விக்கெட்டில் 21 விக்கெட் நேராக வந்த பந்து மூலமே விழுந்த விக்கெட் ஆகும்.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி என்பது தடுப்பு ஆட்டத்தை பொறுத்ததாகும். இதை தவறவிட்ட காரணத்தால்தான் இந்த போட்டியில் அதிக விக்கெட் விழுந்தது. மற்றபடி பிட்ச் மீது முழு பழியையும் போட முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார் .

Story first published: Friday, February 26, 2021, 20:20 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+