சென்னை: நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக இருந்தார். அதே சமயம் வேறு ஒரு வீரரும் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
நேற்று ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை மேட்ச் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது. நேற்று மேட்ச் தொடங்கும் போதே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் "அப்செட்" ஒன்றை கொடுக்க போகிறது.. மேட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலைதான் இருந்தது.

அதன்படியே ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிக சிறப்பாக இருந்தது. நேற்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டது.
முக்கியமாக இப்ராஹிம் சத்ரான் தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடினார். சச்சின் ஸ்டைலில் இவர் ஆடிய சில ஷார்ட்டுகள், ஆங்கர் இன்னிங்ஸ் பெரிய அளவில் கவனம் பெற்றது. 129 ரன்களை இவர் 143 பந்துகளில் எடுத்தார். 8 பவுண்டரி 3 சிக்ஸ் அடித்தார். அதன்பின் கடைசியில் வந்த ரஷீத் கான் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 18 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை அதிர வைத்தார் .
இதன் மூலம் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 291-5 ரன்கள் எடுத்து. கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், ஸ்மித் என்று இறங்கிய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நவீன், ரஷீத், ஓமார்ஷாய் என்று மூன்று முக்கிய பவுலர்களும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு பிரஷர் போட்டனர்.
மேக்ஸ்வெல் அதிரடி: இதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டாப் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். மேக்ஸ்வெல் மட்டும் கடைசிவரை நின்று ஆடிய 201 ரன்கள் எடுத்தார். 128 பந்தில் 21 பவுண்டரி , 10 சிக்ஸர் என்று இவர் ஆடிய ருத்ர தாண்டவம்தான் நேற்று ஆஸ்திரேலியா அணியை காப்பாற்றியது.
மற்ற எந்த வீரரும் 30 ரன்கள் கூட தாண்டாத நிலையில் 201 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார். கால்கள் வலிக்க.. உயிரை பேட்டில் பிடித்துக்கொண்டு.. போராடி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்துள்ளார் மேக்ஸ்வெல். பொதுவாக இப்படி எல்லாம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று பொதுவாக சொல்லப்படும் ஒரு ஆட்டத்தில்.. ஆப்கானிஸ்தான் கையில் இருந்த வெற்றியை தட்டிப்பறித்து ஆஸ்திரேலியாவின் செமி பைனல் சீட்டை உறுதி செய்துள்ளார் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியா கதை முடிஞ்சது பாஸ்.. ஆப்கானிஸ்தான் உண்மையிலேயே செமி பைனலுக்கு வரப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்.. நாங்க ஆஸ்திரேலியாடா.. மைட்டி ஆஸ்திரேலியா என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்துள்ளது.
கும்மின்ஸ்: நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக இருந்தார். அதே சமயம் வேறு ஒரு வீரரும் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அந்த வீரர் யாரும் இல்லை.. ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கும்மின்ஸ்தான்.

மேக்ஸ்வெல் என்னதான் கடினமான ஆப்கானிஸ்தான் பவுலிங்கை எதிர்கொண்டாலும்.. பவுலராக இருந்து கொண்டு கும்மின்ஸ் ஆப்கானிஸ்தானின் கடினமான ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்ட விதம் மிக சிறப்பாக இருந்தது. 68 பந்துகள் நின்று மேக்ஸ்வெல்லுக்கு உறுதுணையாக இருந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட் எடுக்காமல் அவர் நிதானமாக ஆடிய விதம்.. ஆஸ்திரேலிய அணியையே திரும்பி பார்க்க வைத்தது.
நேற்று ஆஸ்திரேலியா ஜெயிக்க மேக்ஸ்வெல் எவ்வளவு காரணமோ அதே அளவிற்கு கும்மின்ஸ் விக்கெட்டை இழக்காமல் "பிடித்து" நின்று ஆடியதும் பெரிய காரணம் ஆகும் .