Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இல்லை.. இவர் தான் இந்தியாவிலே சிறந்த கிரக்கெட் அறிவை கொண்டவர்.. மோயின் அலி புகழாரம்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவை, தான் சந்தித்ததிலேயே 'மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவை கொண்டவர் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயீன் அலி பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவுடன், 2018-19 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில்பணியாற்றிய காலம், அவர் ஒரு அணியை வழிநடத்துவதில் எவ்வளவு திறமையானவர் என்பதைத் தனக்குக் காட்டியதாக மொயீன் அலி கூறியுள்ளார்.

தனது நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையில் உலகின் மிகச்சிறந்த கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கீழ் விளையாடியுள்ள மொயீன் அலி, நெஹ்ராவை இவ்வாறு தேர்வு செய்துள்ளார். 2022 இல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. தனது முதல் ஆண்டிலேயே அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து, இந்தத் தொடரில் கோப்பையை வென்ற முதல் இந்திய பயிற்சியாளர் என்ற சாதனையையும் படைத்தார்.

Moeen ali

அதன் பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணி தொடரின் தொடக்கத்தில் சாம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய பலம் வாய்ந்த அணியாகக் கணிக்கப்படாவிட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியுள்ளது.

IND vs SL டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்.. காஷ்மீர் வீரர் சேர்க்கப்பட வாய்ப்பு

IND vs SL டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்.. காஷ்மீர் வீரர் சேர்க்கப்பட வாய்ப்பு

"என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட் மூளை என்பது போட்டியின் அனைத்து சூழ்நிலைகளையும் நன்கு அறிந்த ஒருவரைக் குறிக்கும்" என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அவரிடம் ஒரு பதில் இருக்கும். போட்டியின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் அவர் பேசுவார். 'ஒரு வீரர் ஏன் சிறப்பாகச் செயல்படவில்லை, ஏன் சிறப்பாகச் செயல்படுகிறார், இந்தச் சூழ்நிலையில் என்ன நடந்திருக்க வேண்டும், என்ன நடக்கக்கூடும்' என விரிவாக அலசுவார்," என்று அவர் கூறினார்.

"ஆனால் அவரிடம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும். அதற்குப் பின்னால் தரவுகளோ அல்லது முந்தைய அனுபவங்களோ இருக்கும். இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது, அதனால் தான் தற்போதும் இது நடக்க வாய்ப்புள்ளது என்று விளக்குவார். எனவே, நான் குறிப்பிடும் பெயர் ஆசிஷ் நெஹ்ரா. அவர் தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஆர்சிபி அணியில் சில ஆண்டுகள் அவருடன் நான் பயணித்துள்ளேன்."

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் 5 பவுலர்கள்.. ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஆர்ஸ்தீப் சிங்

Also Read

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் 5 பவுலர்கள்.. ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஆர்ஸ்தீப் சிங்

"கிரிக்கெட் மூளை என்று வரும்போது, தான் எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதில் அவருக்கு அசாத்திய தெளிவு இருக்கும். அணியின் சூழலை எவ்வாறு உற்சாகமாக வைத்திருப்பது, வீரர்கள் மற்றும் சக பயிற்சியாளர்களை எப்படிக் கையாள்வது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு அற்புதம் வாய்ந்த கிரிக்கெட் மூளை," என்று நெஹ்ராவை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

Story first published: Sunday, August 2, 2026, 20:08 [IST]
Other articles published on Aug 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+