For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் நெஞ்சில் குத்திய முள்! இதே கதியில் சிக்கிய 5 இந்திய வீரர்கள்! Laxman கூட விதி விலக்கு அல்ல

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். தற்போது இருக்கும் வீரர்களில் அஸ்வின் புத்திசாலித்தனமாக கிரிக்கெட் விஷயங்களில் யோசிப்பார். அப்படி இருக்கும் போது அஸ்வினுக்கு இதுவரை ஒரு முறை கூட இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு கிடைக்கவில்லை.

குறைந்தபட்சம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அஸ்வினை தலைமை தாங்க சொல்லி இருக்கலாம்.ஆனால் அப்போது கூட அஸ்வினுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற சூழலில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய ஜாம்பவான்கள் யாரும் ஒரு முறை கூட இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தது இல்லை.

ravichandran ashwin ind vs aus ashwin retirement

அது யார் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் சையது கிர்மானி. இந்திய அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் கிர்மானி 2759 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் இரண்டு சதம், 12 அரை சதம் அடங்கும். சையது கிர்மானி 4 கேப்டன்கள் தலைமையில் விளையாடியிருந்தாலும் அவருக்கு ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஜாகீர் கான் ஜாகிர் கான். 92 டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிய ஜாகிர் கான், ஐந்து கேப்டன்களுக்கு இல் விளையாடியுள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இஷாந்த் ஷர்மா.

105 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 311 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் இஷாந்த் சர்மா ஒரு முறை கூட இந்திய அணியை வழி நடத்தியது கிடையாது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டி விளையாடியுள்ள ஹர்பஜன் 147 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு ஒரு முறை கூட கேப்டன் பதவி டெஸ்ட் கிரிக்கெட்டில் வழங்கப்படவில்லை.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான லக்ஷ்மன். இந்தியாவுக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லக்ஷ்மன். 8,781 ரன்கள் அடித்திருக்கிறார். 15 ஆண்டு காலமாக விளையாடியுள்ள லக்ஷ்மன் ஏழு கேப்டன்களுக்கு கீழ் விளையாடியிருக்கிறார்.ஆனால் ஒருமுறை கூட கேப்டன் பதவியை பெற்றது இல்லை.

Story first published: Thursday, December 19, 2024, 14:33 [IST]
Other articles published on Dec 19, 2024
English summary
Not only R Ashwin- 5 Legendary cricketers did not get captaincy in single test அஸ்வின் நெஞ்சில் குத்திய முள்! இதே கதியில் சிக்கிய 5 இந்திய வீரர்கள்! Laxman கூட விதி விலக்கு அல்ல
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+