மும்பை : உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த தொடக்க வீரர் என்றால் பலரும் சச்சின் டெண்டுல்கரை தான் சொல்வார்கள். 2k கிட்ஸ் ஆக இருந்தால் சிலர் ரோகித் சர்மாவை கூற வாய்ப்பு இருக்கிறது.
இன்னும் சிலர் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை சிறந்த தொடக்க வீரர் என்று கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தம்மைப் பொறுத்தவரை சிறந்த தொடக்க வீரர்கள் என்றால் அது ஷேவாக் தான் என்று கூறியிருக்கிறார்.

சேவாக் அண்மையில் ஐசிசி யின் ஹால் ஆப் பேம் கௌரவம் சேவாக்கிற்கு வழங்கப்பட்டது. இது குறித்து பாராட்டியுள்ள கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களுக்கான அணுகுமுறையே உங்களால் மாற்றிவிட்டது. உங்களுடைய திறமை மிகவும் ஸ்பெஷல். அதிவேகமாக ரன்குவித்து மற்றவர்களுக்கு முன் தனி ஆளாக திகழ்ந்து இருக்கிறீர்கள்.
என்னை பொறுத்தவரை கவாஸ்கருக்கு பிறகு நீங்கள் தான் உலகின் சிறந்த தொடக்க வீரராக இருக்கிறீர்கள். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. நீங்கள் முதலில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் போது, நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள் அதிரடியாக பேட்டிங் செய்கிறீர்கள், சுலபமாக சிக்ஸர்கள் அடிக்கிறீர்கள் என்று பலரும் உங்களைப் பற்றி பேசியிருந்தார்கள்.
தேர்வு குழு உறுப்பினர்களும் அப்போது உங்களைப் பற்றி அதிகமாக எங்களிடம் பேசினார்கள். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நீங்கள் விரைவாக வந்தீர்கள். நான் உங்களிடம் பேசிய அந்த நிகழ்வு, இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. நீங்கள் தொடக்க வீரராக உங்களின் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு முன் நீங்கள் அந்த இடத்தில் விளையாடியது இல்லை என்று எனக்கு தெரியும்.
ஆனால் நான் பேட்டிங் வரிசையில் இந்த இடத்தில் தான் விளையாடுவேன் என்று கூறி யாருமே பிறக்கவில்லை என்று கூறினேன்.ஆனால் உங்களால் முடிந்தது காரணம். உங்களிடம் அந்த திறமை இருந்தது. முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும், 2002 ஆம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நீங்கள் விளையாடி சிறிது நேரத்தில் 80 ரன்கள் சேர்த்தீர்கள். அதிலிருந்து உங்களுடைய நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது என்று கங்குலி சேவாக் குறித்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.