Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைக்கேல் ஷூமேக்கர் அருகே அமர்ந்தபோது கால் நடுங்கியது- நரேன் கார்த்திகேயன்

Narain with Schumacher
பெங்களூர்: ரேஸ் உலகின் ஜாம்பவானான மைக்கேல் ஷூமேக்கர் அருகே அமர்ந்தபோது நான் நடுங்கிப் போய் விட்டேன் என்று கூறியுள்ளார் இந்தியாவின் நம்பர் ஒன் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன்.

பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நரேன் கார்த்திகேயன் தனது ரேஸ் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் முதல் எப்1 கார்ப் பந்தயம் விரைவில் நடைபெறப் போகிறது. அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர், நானும்தான்.

முன்பெல்லாம் விளையாட்டு குறித்து பிள்ளைகள் பேசினாலே பெற்றோர் அதை தவிர்க்கப் பார்ப்பார்கள். அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்பார்கள். ஆனால் இப்போது பெற்றோர்களின் மனோபாவம் மாறி விட்டது. பெற்றோர்களே, பிள்ளைகளை விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்கப்படுத்துகிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

எனக்கு ரேஸில் ஆர்வம் பிறந்தபோது எனது பெற்றோர் அதைக் கண்டு பயப்படாமல், தடுக்காமல் ஆதரித்தனர், ஊக்கப்படுத்தினர்.

நான் ரேஸில் கலந்து கொள்ளும்போது ஒருபோதும் பயந்து நடுங்கியதில்லை. ஆனால் மைக்கேல் ஷூமேக்கருடன் அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், கை, கால் எல்லாம் நடுங்கிப் போய் விட்டது. அதேபோல உள்ளூர் மைதானத்தில் ரேஸில் பங்கேற்கும்போதும் எனக்கு ஒருவிதமான பதட்டம் இருக்கும் என்றார் நரேன்.
Story first published: Wednesday, May 30, 2012, 13:02 [IST]
Other articles published on May 30, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+