பும்ராவோட ரெக்கார்டு எல்லாம் ஒரு ரெக்கார்டா..? டுவிட் போட்டு வம்பை விலைக்கு வாங்கிய விஐபி வீரர்
மும்பை: பவுலிங்கில் பும்ரா சாதித்தது எல்லாம் எனக்கு சாதனையாகவே தெரியவில்லை என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் பவுலர் பும்ரா. அண்மையில் முடிந்த உலக கோப்பையில் அசத்தி தள்ளினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரிலும் பின்னி எடுத்து வருகிறார். தனது சிறப்பான பவுலிங்கால் அந்த அணியை உண்டு, இல்லை என்று பார்த்து வருகிறார்.
பும்ராவின் வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் தான் அவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது. துல்லியமான, நேர்த்தியான பவுலிங்கின் மூலம் எதிரணி வீரர்களை திணறடிக்கிறார் பும்ரா.

50 விக். பெருமை
இதுவரை 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் பும்ரா. அது மட்டுமின்றி தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தி உள்ளார்.
யுவராஜ் டுவிட்டர்
இந்நிலையில் இந்த ஹாட்ரிக் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஆச்சரியமில்லை
வாழ்த்துக்கள்... பும்ரா..!! நீங்கள் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது தகுதியான நபர் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் எனக்கு பும்ரா ஹாட்ரிக் வீழ்த்தியது ஆச்சரியமாக தெரியவில்லை.

அவரது திறமை
ஏன் என்றால், அவர் உலகின் நம்பர் ஒன் பவுலர் அந்த திறனை அவர் வெளிப்படுத்துகிறார். எனவே பும்ரா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியது எனக்கு பெரிதில்லை. அவருடைய திறமையை அவர் வெளிப்படுத்துகிறார் என்றார்.


Click it and Unblock the Notifications