Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷான் கிஷன் ஸ்டார் வீரர்.அவர் அடிச்சு ஆடுனதுல எந்த சர்ப்பிரைசும் இல்ல.ஜேசன் ராய் பாராட்டியிருக்காரு!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கவுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இஷான் ஒரு நட்சத்திர வீரர் என்றும் அவர் அடித்து ஆடியதில் எந்த வியப்பும் இல்லை என்றும் இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பாராட்டியுள்ளார்.

இஷானின் சிறப்பான ஆட்டம்

இஷானின் சிறப்பான ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் அறிமுக வீரர் இஷான் கிஷன். 28 பந்துகளில் 56 ரன்களை அவர் குவித்திருந்தார். ஆட்ட நாயகனாகவும் தேர்வாகியிருந்தார்.

இஷான் குறித்த பாராட்டு

இஷான் குறித்த பாராட்டு

அவரது சிறப்பான துவக்கம் மற்றும் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பந்தின் ஆட்டத்தின்மூலம் இந்தியா அதிரடி வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர் ஒரு நட்சத்திர வீரர் என்றும் அவர் அடித்து ஆடியதில் எந்த வியப்பும் இல்லை என்றும் இங்கிலாந்தின் துவக்க வீரர் ஜேசன் ராய் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய திறமையை சிறப்பாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஷானின் சிறப்பான ஆட்டம்

இஷானின் சிறப்பான ஆட்டம்

ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இஷான் கிஷன் பலமுறை தன்னுடைய சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதால், அவரது தற்போதைய ஆட்டம் வியப்பளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியின்மூலம் இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியில் விளையாடியதுடன் துவக்க வீரராக களமிறங்கி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

பெருமை அளித்த ஆட்டம்

பெருமை அளித்த ஆட்டம்

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியின் இந்திய வெற்றிக்கு பிறகு சஹல் மேற்கொண்ட இன்டர்வியூவில் பேசிய இஷான் கிஷன், இந்தியாவிற்காக விளையாடியது மிகுந்த பெருமையை அளித்ததாக தெரிவித்திருந்தார். பாண்டியா, விராட் கோலி உள்ளிட்டவர்கள் தனக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Tuesday, March 16, 2021, 13:01 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+