Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ரவி சாஸ்திரி வந்து என்ன புண்ணியம்.. பிசிசிஐ போட்ட புதிய முட்டுக்கட்டை.. ஷாக்கிங் முடிவு!

Recommended Video

Ravi Shastri back to coach | ரவி சாஸ்திரியே இந்திய அணி பயிற்சியாளர்.. பிசிசிஐ அறிவிப்பு

லண்டன்: இந்திய அணியின் துணை பயிற்சியாளர் தேர்வு முறையில் செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான சில மாற்றங்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முட்டுக்கட்டையாக அமைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக நடந்த ஆலோசனையின் முடிவில் மீண்டும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை இன்று மாலைதான் கபில் தேவ் வெளியிட்டார். கபில் தேவ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு பயிற்சியாளரை தேர்வு செய்துள்ளது.

இல்லை

இல்லை

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் புதிய பவுலிங், பீல்டிங், பேட்டிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு பதிலாக தற்போது பிசிசிஐ பவுலிங், பீல்டிங், பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் பிசிசிஐ இறங்கி உள்ளது.

முன்பு எப்படி

முன்பு எப்படி

ஆனால் இதற்கு முன் 2016ல் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது, தனக்கு தேவையான துணை பயிற்சியாளர்களை அவரே நியமித்துக் கொண்டார். அதாவது பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர், பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் ஆகியோரை நியமித்தார். தன்னுடைய பேச்சை கேட்கும் நபர்களை இவரே தேர்வு செய்தார்.

நன்றாக இருந்தார்

நன்றாக இருந்தார்

இதில் பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் மிகவும் நன்றாக செயலாற்றினார்கள். பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் மட்டும் விமர்சனத்திற்கு உள்ளானார். இப்போது இவர்கள் மூன்று பேரின் பதவிக்காலமும் முடிந்துள்ளது.

இப்போது என்ன

இப்போது என்ன

இப்போது மீண்டும் ரவி சாஸ்திரி பதவிக்கு வந்து இருந்தாலும், இவர்கள் மூவரின் பதவி நீட்டிக்கப்படவில்லை. அதேபோல் கபில் தேவ் தலைமையிலான தேர்வுக்குழு துணை பயிற்சியாளர்களை தேர்வு செய்யாது. மேலும் தனது துணை பயிற்சியாளர்களை இந்த முறை ரவி சாஸ்திரியும் நியமிக்க முடியாது. 2016ல் சாஸ்திரி நியமித்தது போல இந்த முறை துணை பயிற்சியாளர்களை அவரால் நியமிக்க முடியாது.

யார் செய்வார்

யார் செய்வார்

இந்த முறை துணை பயிற்சியாளர்களை பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் நேரடியாக தேர்வு செய்ய இருக்கிறார்கள். தேர்வுகள் எதையும் வைக்காமல் நேரடியாக துணை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்து உள்ளது. இதுதான் இந்திய அணிக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.பிசிசிஐயின் இந்த முடிவு மொத்த அணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிக மோசம்ம்

மிக மோசம்ம்

பொதுவாக தலைமை பயிற்சியாளர், தனக்கு ஏற்ற துணை பயிற்சியாளரை நியமிப்பதே அணிக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும். பயிற்சியின் போதும் அது அணிக்கு உதவும். ஆனால் இந்த முறை இந்திய அணியில் அப்படி நடக்க போவது இல்லை. இது பயிற்சியின் போது துணை பயிற்சியாளருக்கு ரவி சாஸ்திரிக்கு இடையில் சிக்கலை உண்டாக்க வாய்ப்புள்ளது.

Story first published: Friday, August 16, 2019, 20:14 [IST]
Other articles published on Aug 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+