Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி,ரோகித் கிடையாது! நான் விளையாடியதிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர் என்றால் இவர் தான்!அஸ்வின் கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் விளையாடுவதிலேயே திறமை வாய்ந்த வீரர் யார் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அஸ்வின் 2011 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். அஸ்வின் தனது பெரும்பாலான கிரிக்கெட் வாழ்க்கையை விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் எல்லாம் நீண்ட காலமாக அவருடன் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தாம் விளையாடியதிலே சிறந்த திறமை வாய்ந்த வீரர் என்றால் அது ஜடேஜா தான் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் இருவரும் பந்துவீச்சில் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட்டுகள் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

gautam gambhir india cricket team


ஒரு நாள் கிரிக்கெட் 2017 ஆம் ஆண்டு வரை இந்த கூட்டணி தொடர்ந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2012 முதல் 15 ஆம் ஆண்டு வரை ஜடேஜா அஸ்வின் கூட்டணி தொடர்ந்தது. இந்த நிலையில் ஜடேஜா குறித்து பேசிய அஸ்வின் தான் பார்த்ததிலே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என்றால் அது ஜடேஜா தான். ஜடேஜாவுக்கு இயற்கையிலேயே பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என்று மூன்று பிரிவிலும் திறந்து இருக்கின்றது.

நாங்கள் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியதில் இருந்து எங்களுடைய உறவு முன்னேறியது. நாங்கள் இருவருமே மிகவும் வித்தியாசமானவர்கள். நாங்கள் இருவரும் புரிந்து கொண்டு பந்து வீச்சில், பார்ட்னர்ஷிப் அமைக்க சிறிது காலம் எடுத்துக் கொண்டது. வெளிநாடுகளில் விளையாடும் போது பிளேயிங் லெவனின் எனக்கு இடம் கிடைக்காது. இருந்த போதும் எங்கள் இருவருக்கும் எந்த ஒரு உறவில் பாதிப்பும் இல்லை.

இது எங்கள் அணியில் உள்ள சிக்கலாக தான் கருதுகிறேன் தவிர ஜடேஜாவின் தவறு எதுவும் கிடையாது. ஜடேஜாவுக்கு நிகராக நான் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பது குறித்து நான் யோசிக்க வேண்டும். இதற்காக ஜடேஜாவை நான் கடத்தி வீட்டில் வைத்திருக்கவா முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.


நீங்கள் பொறாமை இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் களத்திற்கு தேவையான வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். அணியில் 11 வீரர்கள் தான் இருக்க முடியும். நாங்கள் அனைவருமே ஒரே அணிக்காக தான் விளையாடுகிறோம். வாய்ப்பு கிடைக்காத வீரர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.எனக்கு அணியில் இடம் வேண்டுமென்றால் நான் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பில்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நான் ஜடேஜா மாதிரி பில்டிங் செய்ய முடியாது. ஆனால் ஜடேஜா போல் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பது குறித்து நான் யோசிக்க வேண்டும். அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 53 போட்டியில் விளையாடி 542 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்கள். இருவரும் இணைந்து வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வரும் 19ஆம் தேதி சென்னையில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 1, 2024, 23:31 [IST]
Other articles published on Sep 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+