Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடத்தெரியாதவன் தெருவை கோணல் என்றானாம்.. பிட்ச் பற்றி சாஸ்திரி 'நச்' கருத்து

நாக்பூர்: டெஸ்ட் போட்டிகளில், பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததற்கு பிட்சை குறை கூற முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணி இயக்குநர், ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மோசமான பிட்ச் உருவாக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன.

பிட்சில் என்த பிரச்சினையுமில்லை என்று இந்திய கேப்டன் கோஹ்லி தெரிவித்திருந்தார். இருப்பினும், 3 டெஸ்ட் போட்டிகளிலும், இரு அணிகளுமே விரைவில் சுருண்டதை பார்க்கும்போது, பிட்ச் மீதான சந்தேகம் நீடித்துக்கொண்டுதான் உள்ளது.

டெஸ்டில் கவனமில்லை

டெஸ்டில் கவனமில்லை

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியுள்ளதாவது: தற்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது குறைந்து ஒருநாள் போட்டிகளும், டி20 போட்டிகளுமே அதிகம் நடப்பதால், பேட்ஸ்மேன்களால், நிலைந்து நின்று ஆட முடியவில்லை.

இதே பிட்ச்

இதே பிட்ச்

முன்பெல்லாம் அதிக நேரம் பிட்சில் நிற்பது யார் என்பதில்தான் போட்டியிருக்கும். இதே பிட்சில்தான், பல சதங்கள் முன்பு விளாசப்பட்டுள்ளன. ஆனால் இப்போது பேட்மேன்களால் அதிக நேரம் நிற்க முடியவில்லை.

பேட்ஸ்மேன்கள் சரியில்லை

பேட்ஸ்மேன்கள் சரியில்லை

பேட்ஸ்மேன்கள், டெக்னிக்கலாக பலவீனமாக உள்ளனர். டுப்ளசிஸ் மற்றும் ஆம்லா இருவரும் நாக்பூர் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஜோடியாக பேட் செய்தபோது, பிட்ச் பற்றிய எந்த சந்தேகமும் யாருக்கும் வரவில்லை. பிட்ச் சரியில்லை எனில் அவர்களால் மட்டும் எப்படி பேட் செய்ய முடிந்ததது.

விஜய் கலக்கல்

விஜய் கலக்கல்

முரளி விஜய் பேட்டிங் செய்ததை வைத்து பார்க்கும்போது, அவர் சதம் விளாசுவார் என்றுதான் எதிர்பார்த்தோம். பிட்ச் சரியில்லை என்றால் விஜயால் எப்படி இலகுவாக, ஆட முடிகிறது என்பதை யோசிக்க வேண்டும்.

பெங்களூர்ல எப்படி

பெங்களூர்ல எப்படி

பெங்களூர் பிட்ச் பேட்டிங்கின் சொர்க்கம் என அழைக்கப்படுவது. ஆனால் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவை ஆல்-அவுட் செய்துவிட்டு, விக்கெட் இழப்பின்றி இந்தியா 80 ரன்கள் எடுத்திருந்தபோதுதான், மழையால் போட்டி கைவிடப்பட்டது. இந்திய பவுலர்கள் திறமையை மறைத்துவிட்டு, பேட்ஸ்மேன்கள் திறமையின்மையை மறந்துவிட்டு, பிட்சை குறை கூறுவது சரியில்லை. இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Monday, November 30, 2015, 15:56 [IST]
Other articles published on Nov 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+