Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷாந்த் சர்மா.. உங்களுக்கே வெட்கமா இல்லையா?: இது அமுல் விளம்பரம்

பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் "மிக மிக அற்புதமாக" பந்து வீசிய இந்திய வீரர் இஷாந்த் சர்மாதான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்படுகிறவர்..

ஆஸ்திரேலியா- இந்தியா இடையே 3 ஒருநாள் போட்டிகளில் 189 ரன்களை வாரிக் கொடுத்த தாராள மனதுக்கு சொந்தக்காரர் இஷாந்த் சர்மா. அதுவும் 3வது ஒருநாள் போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன்னை கொடுத்து இந்தியாவின் வெற்றியில் மண்ணை அள்ளிப் போட்டவர் அவர்.

Now, an ad asks Ishant Sharma 'aren't you ashamed?'

இந்திய அணியின் கேப்டன் டோணி கூட, இதெல்லாம் ஸ்பூனில் வைத்தா ஊட்டிவிட முடியும்? என்று கொந்தளித்திருந்தார். இஷாந்த் இப்படி செய்ததால் இப்போது ஃபேஸ்புக், ட்விட்டரில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

கேப்டன் டோணியின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமுல் நிறுவனம் விளம்பர கேலிச் சித்திரத்தை உருவாக்கியுள்ளது. அதில் "Ishant, sharm hai kya?" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அதாவது இஷாந்த் சர்மா, உங்களுக்கே வெட்கமா இல்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதையே இன்று தமது ட்விட்டர் பக்கத்திலும் அமுல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அமுலின் ட்விட்டர் பதிவை ஏராளமானோர் மீள்பதிவும் செய்துள்ளனர்.

Story first published: Tuesday, October 22, 2013, 14:35 [IST]
Other articles published on Oct 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+