இந்திய வீரர்களுக்கு ரூ 9 கோடியில் சொகுசு வீடுகளைத் தரும் அமர்பாலி
டெல்லி: முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான அமர்பாலி, உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணியினருக்கு டெல்லி அருகே சொகுசு வில்லாக்களைப் பரிசாக அளித்துள்ளது.
அமர்பாலி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக தற்போது இருப்பவர் கேப்டன் டோணி என்பது குறிப்பிடத்தக்கது. டோணி தலைமையிலான அணி உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து தற்போது டோணிக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 2900 சதுர அடியில் அமைந்துள்ள பிரமாண்ட வீட்டை பரிசாக கொடுத்துள்ளது அமர்பாலி.
அதேபோல இந்திய அணி உறுப்பினர்களுக்கு தலா ரூ. 55 லட்சம் மதிப்பிலான சொகுசு வீட்டைப் பரிசாக அளித்துள்ளது. இவை 1690 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளதாம். அத்தனை வீடுகளும் டெல்லி அருகே நோய்டாவில் இந்த நிறுவனம் அமைத்துள்ள நோய்டா ட்ரீம்வேலி பகுதியில் அமைந்துள்ளன.
இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் அனில்குமார் சர்மா கூறுகையில், இந்திய அணியினருக்கு இந்தப் பரிசை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றார்.
சரி, உலகக் கோப்பையை வென்றதன் மூலம் டோணியின் மார்க்கெட் ரேட் உயர்ந்து விட்டதே. அவரது பிராண்ட் அம்பாசடர் தொகைக்கான ரேட்டும் உயருமா என்று சர்மாவிடம் கேட்டபோது, டோணி பெருந்தன்மையானவர், பெரிய மனசுக்காரர். ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தை அவர் மாற்ற முயல மாட்டார். அது மாறாது என்றார்.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு படங்கள்
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
