Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்டர்சன் மீதான புகாருக்கு இங்கிலாந்து பதிலடி: ஜடேஜாவுக்கு எதிராக ஐசிசியில் புகார்

லண்டன்: தங்கள் நாட்டு வீரர் ஆண்டர்சன் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் அளித்ததை தொடர்ந்து அதற்கு பதிலடியாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீது இங்கிலாந்து கிரிக்கெட் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. அடுத்த டெஸ்ட் போட்டி இன்று லாட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

ஆண்டர்சன் அடாவடி

ஆண்டர்சன் அடாவடி

முதல் போட்டியின் 2வது நாளின் உணவு இடைவேளையின் போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா மற்றும் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆகியோர் மைதானத்தை விட்டு ஒன்றாக பெவிலியனை நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஜடேஜாவை, ஆண்டர்சன் திட்டியதாகவும் பிடித்து தள்ளி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஐசிசியில் இந்தியா புகார்

ஐசிசியில் இந்தியா புகார்

இந்திய அணி மேலேஜர் சுனில் தேவ் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளார். ஐசிசி சட்டத்தின் 2.3.3 பிரிவின்கீழ் வரும் இந்த விதிமீறலுக்காக ஆண்டர்சனுக்கு இரு டெஸ்ட் அல்லது நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடியும்.

இங்கிலாந்து ஆச்சரியம்

இங்கிலாந்து ஆச்சரியம்

இதனிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த புகார் குறித்து ஆச்சரியம் வெளியிட்டிருந்தது. ஆண்டர்சனை இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியுள்ளது வியப்பளிக்கிறது. இது ஒரு சாதாரண விஷயமாகும். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏன் பெரிதுபடுத்தியது என்று புரியவில்லை என்று கூறியிருந்தது.

பதில் புகார்

பதில் புகார்

இதைத்தொடர்ந்து ஜடேஜா மீது இங்கிலாந்து அணி மேலாளர் பில் நியாலே, ஐசிசியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "திடீரென ஆண்டர்சனை நோக்கி திரும்பிய ஜடேஜா, அவரை மிரட்டும் தோரணையில் ஆக்ரோஷமாக ஆண்டர்சனை நோக்கி நடந்து சென்றார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்படுமா?

தடைவிதிக்கப்படுமா?

பெவிலியனை நோக்கி வீரர்கள் நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்தததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது புகாரில் தெரிவித்துள்ளது. இது ஐசிசியின் லெவல் 2 பிரிவில் குற்றச்செயலாகும். இதற்காக போட்டியின் முழு ஊதியம் அல்லது பாதி ஊதியத்தை அபராதமாக விதிக்க முடியும். அல்லது இரு போட்டிகளுக்கு தடை விதிக்கவும் வழியுள்ளது.

Story first published: Thursday, July 17, 2014, 10:51 [IST]
Other articles published on Jul 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+