கடந்த முறை ஸ்மித், வார்னர் இல்லைன்னு சொன்னீங்க... இப்ப யார் இல்லைன்னு சொல்லுங்க.. சாஸ்திரி கேள்வி!
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சி அளித்து வருகிறார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
கடந்த 2018 -19ல் ஆஸ்திரேலியாவை இந்தியா முதல்முறையாக அவர்களது மண்ணில் வீழ்த்தியபோது, அந்த அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இல்லாததாலேயே இந்தியா வெற்றி கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர்களும் அணியில் இடம்பெற்ற நிலையில் இந்தியா வெற்றி கொண்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ரவி சாஸ்திரி, அந்த அணியில் தற்போது யார்தான் இல்லை கூறுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி கடந்த சில தினங்களாக சென்னையில் குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பங்கேற்றார். இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சிதம்பரம் மைதானத்தில் இன்றைய தினம் துவங்கியுள்ளது.

இந்தியா இமாலய சாதனை
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வடிவங்களிலான தொடர்களிலும் இந்தியா இரண்டு தொடர்களை கைகொண்டுள்ளது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இமாலய சாதனை புரிந்துள்ளது. கடந்த 2018-19 வரலாற்றை மீண்டும் திருப்பி கொண்டு வந்தது.

சிறப்பான வெற்றி
காயம் உள்ளிட்ட காரணங்களால் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது. அதிகமான வீரர்கள் காயத்தின் இடையிலும் மைதானத்தில் விளையாடியதை காண முடிந்தது. மொத்தத்தில் சிறப்பான தொடராக டெஸ்ட் தொடர் அமைந்தது.

2018 -19 வெற்றி
கடந்த 2018-19ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வெற்றி கொண்டபோது, அந்த அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை. அதனால்தான் இந்திய அணிக்கு அந்த வெற்றி சாத்தியமானது என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

ரவி சாஸ்திரி கேள்வி
இந்நிலையில் கடந்த முறை ஸ்மித் இல்லை, வார்னர் இல்லை அதனால் வெற்றி பெற்றதாக பலரும் கூறினர். இப்போது ஆஸ்திரேலிய அணியில் யார் இல்லை என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சிற்காக பேசிய அவர், ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த இந்திய வெற்றி குறித்து பெருமை தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு காரணம்
கடந்த 2014 -15 முதல் இந்திய கேப்டன் விராட் கோலி அணியில் சிறப்பான வடிவமைப்புகளை செய்து வருவதாகவும் அந்த செயல்பாடுகளே தற்போதை யவெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் ரவி சாஸ்திரி மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications