Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்பா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்.. நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? இன்ஸ்டாகிராமில் என்ன பண்ணப் போறீங்க?

சென்னை : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி தனக்கென இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை துவங்கி உள்ளது.

முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் மட்டும் இருந்த அவர்கள், தற்போது புகைப்படம், வீடியோ சார்ந்த சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் களமிறங்கி இருக்கிறார்கள். வெறுமனே நிகழ்ச்சி அப்டேட் கொடுக்க மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமிலேயே சில நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Now Star Sports Tamil Instagram page will entertain you

ட்விட்டர், பேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது, இளைஞர்களுக்கு பிடித்த சமூக வலைதளமாக உள்ளது. அதனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழும் இந்த கோதாவில் குதித்துள்ளனர்.

கிரிக்கெட் தான் பிரதானம் என்றாலும், கால்பந்து மற்றும் பிற விளையாட்டுக்கள் சார்ந்த விஷயங்களையும் இந்த பக்கத்தில் காணலாம் என கூறி இருக்கிறார்கள்.

ரகளை வித் ரமேஷ் என முன்னாள் இந்திய அணி வீரர் சடகோபன் ரமேஷ் வழங்கும் ஒரு நிகழ்ச்சியும், லெட் மீ டெல் எ ஸ்டோரி வித் ஹேமங் பதானி மற்றும் ட்விட்டரை கலக்கி வரும் ஸ்டாரை கேளுங்கள் ஆகிய மூன்று புதிய கன்டென்ட் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக வழங்கப் போகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழா? அதுவும் உண்டு. மெரீனா அரினா என்ற நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த தருணங்கள், போட்டிகள் குறித்து காணலாம். இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே காண முடியும் என கூறி இருக்கிறார்கள்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் இன்ஸ்டாகிராம் கணக்கில் இன்னும் ஆட்டம் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் சில ஆயிரம் அந்த பக்கத்தை பாலோ செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, April 2, 2020, 20:57 [IST]
Other articles published on Apr 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+