82 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. படு மோசமான பேட்டிங்.. ஒருநாள் தொடரை வென்ற ஆஸி
குயின்ஸ்லாந்து : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
Recommended Video
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து தொடக்க வீரராக டேவிட் வார்னர் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர்.

தடுமாறிய ஆஸ்திரேலியா
கடந்த சில காலமாகவே ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், தொடர்ந்த மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று டக் அவுட்டான நிலையில், கடந்த 13 ஒருநாள் இன்னிங்சில் ஆரோன் பிஞ்ச் 5வது முறையாக டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். வார்னர் 5 ரன்களிலும், லாபஸ்சேங் 5 ரன்களும், ஸ்டோனிஸ் டக் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஸ்மித் அரைசதம்
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவருக்கு மேக்ஸ்வெல் நிதானமாக விளையாடி 50 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் மிட்செல் ஸ்டார்க் 38 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.

ஆமை வேகம்
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இது ஒருநாள் போட்டி என்பதையே மறந்து விளையாடினார்கள். 5.4 வது ஓவரில் நியூசிலாந்த 1 ரன் மட்டுமே அடித்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

82 ரன்களில் சுருண்டது
குப்தில் 2 ரன்கள், கான்வே 5 ரன்கள், வில்லியம்சன் 17 ரன்கள், டாம் லாத்தம் டக் அவுட்டாக, நியூசிலாந்து அணி 38 ரன்கள் சேர்ப்பதற்குள் பாதி விக்கெட்டை இழந்தது. இறுதியில் 33வது ஓவரில் நியூசிலாந்து அணி 82 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இழந்தது


Click it and Unblock the Notifications