Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். பவுலர்கள் சூப்பர் ஆச்சே.. அரையிறுதியில் வெல்ல இதை செய்யனும்.. ரகசியத்தை உடைத்த வில்லியம்சன்

சிட்னி : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன.

இந்த போட்டி இந்திய நேரப்படி புதன்கிழமை மதியம் 1:30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அரையிறுதி ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பவுலர்களுக்கு ஆதரவு

பவுலர்களுக்கு ஆதரவு

இது குறித்து பேசிய அவர், எங்கள் அணியில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். எங்கள் அணிக்காக நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறார்கள். முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்திற்கும் ஏற்ற வகையில் செயல்படுவார்கள். இது போன்ற தொடர்களில் அவர்கள் பெரிய பங்கை வகிப்பார்கள்.

அரையிறுதி

அரையிறுதி

நடப்பு டி20 உலக கோப்பையிலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். நாளை இன்னொரு மைதானத்தில் வேறொரு போட்டியாளரை நாங்கள் சந்திக்க போகிறோம். அவர்களுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சிட்னி மைதானத்தில் நடப்பு உலக கோப்பையில் நாங்கள் இரண்டு முறை விளையாடினோம்.

சிட்னி மைதானம்

சிட்னி மைதானம்

முதல் ஆட்டத்தில் சிட்னி ஆடுகளம் சிறப்பாக இருந்தது. ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகளம் மாறி இருந்தது. இதனால் ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டு விளையாடினால், ஆடுகளம் வேறு மாதிரியாக செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் சிட்னி மைதானத்தில் ஏற்கனவே விளையாடியதை நான் சாதகமாக கருதவில்லை.

வெற்றி கிடைக்கும்

வெற்றி கிடைக்கும்

பாகிஸ்தானும் இந்த ஆடுகளத்தில் விளையாடி இருக்கிறது. அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நாளை நாங்கள் எப்படி விளையாட போகிறோம்? எங்களுடைய யுத்திகளை சரியான முறையில் செயல்படுத்துகிறோமா, களத்திற்கு ஏற்ப நாங்கள் எங்கள் ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறோமா என்பதே முக்கியம். அறிவுப்பூர்வமாக விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

பாக். அணிக்கு பாராட்டு

பாக். அணிக்கு பாராட்டு

நாங்களும் பலமான அணியாக இருக்கிறோம். நாளை ஆட்டம் நிச்சயம் கடினமாக இருக்கும். இரண்டு அணிகளும் நல்ல போட்டிகளில் விளையாடி தான் அரையிறுதி வரை வந்திருக்கிறோம். நாளை ஆட்டத்தை நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பாகிஸ்தான் அணியில் தலைச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களும் நல்ல கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். பாகிஸ்தான அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் மேட்ச் வின்னர்களும் இருப்பதே அந்த அணியின் பலமாக நான் கருதுகிறேன்.

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

இந்த தொடரில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளையும் வீழ்த்தி இருக்கிறது. எனவே இது நிச்சயம் ஒரு சிறந்த உலக கோப்பையாக இருக்கிறது. எந்த அணி ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொண்டு விளையாடுகிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெற முடியும். இதுவரை நாங்கள் சிறப்பாக விளையாடியிருக்கிறோம். நாளை ஒரு முறையும் நன்றாக விளையாடினால் இறுதிப் போட்டிக்கு எங்களால் செல்ல முடியும் என்று வில்லியம்சன் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 8, 2022, 18:18 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+