Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 போட்டியிலும் வெற்றி.. அடுத்தது இந்தியா தான்.. ரோகித்தை வம்பிழுத்த நியூசிலாந்து கேப்டன்

சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலககோப்பை புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்தை பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் கூட நியூசிலாந்தை 110 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற நிலைக்கு கொண்டு வந்தது. ஆனால் அதன் பிறகு செய்த தவறால் ஆப்கானிஸ்தான அணி படுதோல்வியை தழுவியது.

NZ captain Tom Latham about his team performance vs India

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம், இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முதலில் சில நேரம் கடும் நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். ஆனால் அந்த நெருக்கடியை திரும்பி பந்து வீசும் அணிக்கு நாங்கள் கொடுத்து விட்டோம்.போட்டியின் நடுவில் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம். எனினும் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் எங்களுக்கு சில வாய்ப்பையும் கேட்சை தவறி விட்டு கொடுத்தார்கள். அதை நாங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டோம். கிளான் பிலிப்ஸ், சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி எங்களிடமிருந்து நெருக்கடியை குறைத்து விட்டார். முதல் 10 ஓவர் என்பது ஆட்டத்தில் மிகவும் முக்கியம். தற்போது எங்களுக்கு ஒரு வாரம் ஓய்வு இருக்கிறது.அதன் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ளப் போகிறோம்.

இந்த வெற்றியை தொடர்வோம் என்று நம்புகிறோம் என்று டாம் லாத்தம் கூறினார். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா இந்த போட்டி மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது. சர்வதேச அளவில் நீங்கள் விளையாடும் போது இது போன்ற கேட்ச்களை விடக்கூடாது.ஆட்டத்தின் முடிவில் நீங்கள் எந்தெந்த கேட்ச்களை விட்டீர்களோ அதுதான் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பில்டிங்கால் போட்டியை தவற விட்டு விட்டோம்.

டாஸ் வென்ற பிறகு, நான் சொல்ல வேண்டும் எனக்கு ஆடுகளும் எவ்வாறு செயல்பட போகிறது என்று கணிக்க முடியவில்லை. முதலில் ல பந்து கொஞ்சம் சுழற் பந்துவீச்சு சாதகமாகவும், ஆடுகளம் தோய்வாகவும் இருந்தது. அதனால் நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்தோம் தற்போது பில்டிங்கில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியும் .நிச்சயமாக இன்றைய ஆட்டம் எங்களுக்கு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது.

Story first published: Wednesday, October 18, 2023, 23:47 [IST]
Other articles published on Oct 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+