Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமாரை கட்டுப்படுத்த தனி வியூகம்.. அவருக்காக ஆலோசனை நடத்தினோம்.. நியூசி. பயிற்சியாளர் கருத்து

நேப்பியர் : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது t20 போட்டி செவ்வாய்க்கிழமை மதியம் இந்திய நேரப்படி 12 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகி இருக்கிறார். வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுதி தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.சூரியகுமாரின் இந்த ஆட்டத்தினால் தான் இந்தியா வெற்றி பெற்றதாக இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரமிப்பில் இருந்தோம்

பிரமிப்பில் இருந்தோம்

இது குறித்து பாராட்டிய வில்லியம்சனும் சூரியகுமாரின் இந்த அதிரடி மட்டும்தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். இந்த நிலையில் 3வது டி20 போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கேரி ஸ்டேத், சூரியகுமாரின் ஆட்டத்தை பார்த்து அனைவரும் பிரமிப்பில் இருந்தோம் என்று கூறினார்.

தனி வியூகம்

தனி வியூகம்

அவருடைய ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. நாங்கள் அவரைக் குறித்து பேசுவதற்காகவே ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். மூன்றாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து தனி வியூகம் வகுக்க உள்ளோம். அவருடைய அதிரடி ஆட்டத்திற்கு எப்படி பதிலடி தருவது என்பது குறித்து பேசுவதற்காக போட்டி தொடங்குவதற்கு முன்பு சிறப்பு கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.

பாராட்டு

பாராட்டு

தற்போது டி20 கிரிக்கெட்டில் உலகத்திலே சூரியகுமார் யாதவ் தான் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்கிறார் என்று கேரி ஸ்டேத் பாராட்டினார். இதனை தொடர்ந்து பேசிய தற்காலிக கேப்டன் டிம் சவுதி, சூரியகுமாரியாதவ் மைதானத்தில் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் அடித்து விடுவார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். நேபியரில் சூரியகுமார் யாதவ் எதிராக எப்படி செயல்படுவது என்பது குறித்து பேசி வருகிறோம்.

டிம் சௌதியும் உறுதி

டிம் சௌதியும் உறுதி

சூர்யகுமாருக்கு எதிராக ஒரு திட்டத்தையும் தீட்டுவோம் என்று டிம் சௌதி கூறினார். இப்படி எதிர் அணி வீரர்கள் இந்திய வீரர் ஒருவரை குறித்து பேசி அவருக்காக தனி யுத்திகளை அமைப்பது என்பதெல்லாம் பார்த்து இந்திய ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகி விட்டது. சச்சின் , விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு எதிராக மட்டும் தான் எதிரணி வீரர்கள் வியூகம் அமைப்பார்கள். தற்போது சூரியகுமார் யாதவும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.

Story first published: Monday, November 21, 2022, 23:29 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+