Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்

கிறிஸ்ட்சர்ச்: சர்வதேச கிரிக்கெட் இனி மெல்ல சாகும் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் டிரெண்ட் பவுல்ட் போன்றோர் எடுத்த முடிவு தான்.

அண்மையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் ஓய்வு முடிவை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது நியூசிலாந்து அணியின் டிரெண்ட் பவுல்ட் இப்படி ஒரு முடிவை எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

டி20 தொடர்

டி20 தொடர்

தற்போது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்களுக்கு என டி20 லீக் தொடரை ஐபிஎல் பாணியில் நடத்துகிறது.ஏற்கனவே, ஐபிஎல், பிக் பேஷ், சிபிஎல் என அரை டஜன் கணக்கில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவும், ஐக்கிய அரபு அமீரகமும் புதிய கிரிக்கெட் தொடரை ஐபிஎல் அணியின் கூட்டணியோடு தொடங்குகிறது.

வீரர்களின் நிலை

வீரர்களின் நிலை

இதனால், இவ்விரண்டு தொடரிலும் பணம் பெரும் அளவில் புரள்கிறது. இதன் காரணமாக பல்வேறு வீரர்கள் இந்த தொடர்களில் விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் மற்ற விளையாட்டை நாம் எப்படி பார்க்கிறோமோ, மற்ற விளையாட்டு வீரர்களுக்கு எப்படி சம்பாதிக்க முடியவில்லையோ, அதே போல் தான் மற்ற நாட்டில் கிரிக்கெட் வீரர்களின் நிலைமை.

டிரெண்ட் பவுல்ட் மறுப்பு

டிரெண்ட் பவுல்ட் மறுப்பு

இந்த நிலையில், தான் ஐபிஎல் போன்ற தொடரில் கிடைக்கும் பணத்திற்காக, நாட்டுக்காக விளையாடுவதை வீரர்கள் புறக்கணித்து வருகிறார்கள். தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பவுல்ட், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கும் ஊதிய ஒப்பந்தத்தை வேண்டாம் என்று கூறி விட்டார். இதன் மூலம், இனி நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் பவுல்ட் இடம்பெறுவது சந்தேகம் தான்.

முடிவுக்கு காரணம்

முடிவுக்கு காரணம்

இதுவே பவுல்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தால், அவரால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி இல்லாமல் மற்ற நாடுகளில் சென்று டி20 தொடரில் விளையாட முடியாது. இதனால் தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஆனால் அவர், தம் மனைவி, குழந்தையுடன் நேரத்தை செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 10, 2022, 22:23 [IST]
Other articles published on Aug 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+