Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூச்சு வாங்கும் "உள்ளூர் புலிகள்".. மிரட்டும் நியூசி., ஓப்பனர்ஸ் - ஆரம்பமே "அதகளம்"

லண்டன்: நியூசிலாந்து ஓப்பனர்களை பிரிக்க, இங்கிலாந்து பவுலிங் யூனிட் மூச்சு முட்ட போராடியது. இது மறைமுகமாக இந்தியாவுக்கு நியூசி., விடும் எச்சரிக்கையோ?

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில், டிரெண்ட் போல்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.

 ட்ரிங்க்ஸ் வரை

ட்ரிங்க்ஸ் வரை

நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் நாள் ஆட்டத்தின் முதல் 'ட்ரிங்க்ஸ்' வேளை வரை, இங்கிலாந்தால் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட முடியவில்லை. ட்ரிங்க்ஸ் இடைவேளை வரை மொத்தம் 13 ஓவர்கள் முடிந்துள்ளது. ஸ்கோ 47-0. ஒரு விக்கெட் கூட விழவில்லை.

 இம்பேக்ட் இல்லை

இம்பேக்ட் இல்லை

விக்கெட் விழாதது பெரிய விஷயமல்ல. ஆனால், லார்ட்ஸ் பிட்சில், இங்கிலாந்து பவுலர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. குறைந்த பட்சம் பவுன்ஸ் போட்டு கூட அவர்கள் அட்டாக் செய்யவில்லை. 13 ஓவர்களில் அவர்கள் 73% Full Length டெலிவரிகளாகவே வீசியுள்ளனர். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் என்று அணியின் மோஸ்ட் சீனியர் மாற்றி மாற்றி வீசியும், துளி இம்பேக்ட் இல்லை.

 நேர்த்தியாக டிஃபன்ஸ்

நேர்த்தியாக டிஃபன்ஸ்

டாம் லாதம் மிக மிக நிதனமாக இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்கிறார். கிட்டத்தட்ட 50 பந்துகளை சந்தித்தும், உணவு இடைவேளை வரை 17 ரன்களே எடுத்திருக்கிறார். மிக நேர்த்தியாக டிஃபன்ஸ் ஆடுகிறார். அதேசமயம், மோசமான பந்துகளை பவுண்டரி தட்டிவிடவும் தயங்குவதில்லை.

 உள்ளூரில் புலி

உள்ளூரில் புலி

நியூசிலாந்து அணியின் இந்த தொடக்க பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்துவிட்டது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும், இந்திய அணிக்கு நியூசிலாந்து மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது. உள்ளூரில் புலியான இங்கிலாந்து பவுலிங்கையே நியூசிலாந்து ஓப்பனர்கள் லெஃப்டில் டீல் செய்தால், அப்போ இந்திய பவுலர்களின் நிலைமை?

Story first published: Wednesday, June 2, 2021, 21:03 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+