
டேஞ்சர் பவுலர்
இதில், இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் முக்கிய நியூசிலாந்து பவுலராக இருப்பவர் டிரெண்ட் போல்ட். இவரது Pace-ஐ சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக, ஓப்பனர்ஸ்களுக்கு. இவரது ஸ்விங் + பேஸ் அவ்வளவு எளிதில் கெஸ் செய்ய முடியாது. இங்கிலாந்து பிட்சுகள், ஏறக்குறைய நியூசிலாந்து பிட்சுகளை போன்று இருக்கும் என்பதால், பாரபட்சமின்றி விக்கெட்டுகள் சரியும். இங்கிலாந்தில், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 21 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பெஸ்ட் 5/57.

மெர்சல் பவுலிங்
குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக தனது ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார் டிரெண்ட் போல்ட். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஐபிஎல் 2020 தொடர். அமீரகத்தில் நடைபெற்ற அத்தொடரில் பவர் பிளேயில் டிரெண்ட் போல்ட் 36 ஓவர்களை வீசி 16 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பேட்ஸ்மேன்கள் சொர்க்கபுரியான டி20 போட்டிகளிலேயே, கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவரை நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசனிலும் மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

லேட் ரியாக்ஷன் ரோஹித்
அப்படி இருக்கும் போது, நியூசிலாந்தை ஒத்த ஆடுகளங்களை கொண்ட இங்கிலாந்து பிட்சில் எப்படி பந்து வீசுவார் என்று கெஸ் செய்து கொள்ளுங்கள். கையில் 'டியூக்' பந்தை கொடுத்து, மிதமான இங்கிலாந்து வெப்பநிலையில், ஸ்விங் மற்றும் பேஸ் என்று தெறிக்கவிட்டால், பேட்ஸ்மேன்கள் நிலைமை அதோகதி தான். குறிப்பாக, ரோஹித் போன்ற 'லேட் ரியாக்ஷன்' பேட்ஸ்மேன்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் இவர் எமன் என்றால் மிகையல்ல.

சீனியர் டேஞ்சர்
அணியின் மற்றொரு சீனியர் ஃபாஸ்ட் பவுலர் டிம் சவுதியும் இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஓப்பனர்ஸ், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என்று பாரபட்சமின்றி விக்கெட்டுகளை அள்ளும் பவுலர். இவருக்கு ஏற்ற பிட்ச் அமைந்துவிட்டால், அன்றைய நாள் இவருடையது தான். எத்தனை கோலி வந்தாலும் சமாளிக்க முடியாது. இங்கிலாந்தில், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். பெஸ்ட் 6/50. பவுன்ஸ், ஸ்விங் இவரது பலம். இன் ஸ்விங் மூலம் இந்திய வீரர்களை திணறடிக்க இந்நேரம் இவர் மனதில் பல வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











