For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

12 ஆண்டு கிரிக்கெட் வாழ்வில் முதல்முறை.. குறுக்கே நின்ற ஆஸ்திரேலியா பவுலர்.. சோகத்தில் வில்லியம்சன்!

வெலிங்டன் : 12 ஆண்டு கால கிரிக்கெட் டெஸ்ட் வாழ்க்கையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் முதல்முறையாக ரன் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் க்ரீனின் அபார ஆட்டத்தால் 383 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கேமரூன் க்ரீன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸ், 23 பவுண்டரி உட்பட 174 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

NZ vs AUS : Kane Williamson is run out in test cricket for the first time in the 12 years

இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. அனுபவ வீரர் டாம் லேதன் - வில் யங் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் மிட்செல் ஸ்டார்க் வீசிய 4வது ஓவரில் டாம் லேதம் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வெலிங்டன் மைதானம் கேன் வில்லியம்சனின் கோட்டை என்பதால் அவரது ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஏனென்றால் வெலிங்டன் மைதானத்தில் கேன் வில்லியம்சன் ஆடிய போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1,488 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடைசி 6 இன்னிங்ஸில் 3 அரைசதங்கள், இரட்டை சதம் உட்பட 2 சதங்களை வில்லியம்சன் விளாசி இருக்கிறார். இதனால் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா வீரர்களும் தீவிரமாக இருந்தனர்.

இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய 2வது பந்தில் கேன் வில்லியம்சன் மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன்னை எடுக்க ஓடினார். அப்போது எதிர் முனையில் இருந்த வில் யங், வில்லியம்சன் ஓடி வந்த திசையிலேயே ஓடினார். அதுமட்டுமல்லாமல் பவுலிங் செய்துவிட்டு மிட்செல் ஸ்டார்க்கும் அதே இடத்தில் நிற்க, பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர்.

இதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலியா வீரர் லபுஷேன், குறி பார்த்து ஸ்டம்பை சிதறடித்தார். இதனால் கேன் வில்லியம்சன் டக் அவுட்டாகி வெளியேறினார். 12 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில், கேன் வில்லியம்சன் முதல்முறையாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் டக் அவுட்டாகி சோகமாக வெளியேறிய வில்லியம்சன், ரன் அவுட் ரீப்ளேவை மீண்டும் மீண்டும் பார்த்து சோகமடைந்தார்.

Story first published: Friday, March 1, 2024, 10:41 [IST]
Other articles published on Mar 1, 2024
English summary
NZ vs AUS : Kane Williamson is run out in test cricket for the first time in the 12 years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+