Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ - காலை வச்சிட்டு சும்மா இருந்து இருக்கலாம்ல.. காமெடியாக ரன் அவுட்டான வங்கதேச வீரர் ரஹிம்

மிர்பூர் : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி நட்சத்திர வீரர் முஸ்பிகுர் ரஹீம் காமெடியாக ரன் அவுட் ஆன விதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் ஒவ்வொரு வெளிநாட்டு அணிகளும் ஆசிய கண்டத்தில் பயிற்சி பெறுவதற்காக ஒரு நாள் தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.

NZ vs Ban 3rd odi - Mushfiqur rahim dismissed in a bizarre way by kicking stump

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிலும் நியூசிலாந்து அணி வங்கதேசத்திலும் விளையாடுகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய வங்கதேச அணியின் தற்காலிக கேப்டன் நஜ்முல் ஹுசைன் அபாரமாக விளையாடி 76 ரன்கள் சேர்த்தார். தவ்ஹீத் 18 ரன்களிலும், மஹமதுல்லா 21 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

முஸ்பிகுர் ரஹீம் களத்தில் பொறுமையாக இருந்து ரன்களை சேர்த்தார். 25 பந்துகளில் அவர் 18 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 15.1 வது ஓவரில் முஸ்பிகுர் ரஹீம் பேட்டிங் செய்யும்போது பெகுர்சன் பந்தை அடிக்கும்போது. பந்து ஸ்டெம்பில் பட பார்த்தது. உடனடியாக பந்தை காலால் தடுக்க வேண்டும் என்பதற்காக அதனை கராத்தேவில் உதைப்பது போல் உதைக்க சென்றார் .ஆனால் அதற்குள் பந்தும் ஸ்டெம்பில் பட்டது , முஸ்பிகுர் ரஹீமின் காலும் ஸ்டெம்பில் பட்டது.

இதனால் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை 34.3 ஓவரில் வங்கதேச அணி 171 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து வீரர் பவுல்ட், இரண்டு விக்கெட்டுகளையும் ஆடல் மிலன் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர் யங் 70 ரன்களும், ஹென்றி நிக்கோலஸ் 50 ரன்களும் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி 34.5 ஓவர்களில் எல்லாம் 175 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வென்றது.

Story first published: Tuesday, September 26, 2023, 21:02 [IST]
Other articles published on Sep 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+