For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

NZ vs BAN: வாங்க டா வீட்டுக்கு போலாம்.. வங்கதேசத்தை நம்பி கடுப்பான பாகிஸ்தான்.. நியூசிலாந்து அபாரம்

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இன்று ராவல்பிண்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டி பாகிஸ்தான் தரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பாகிஸ்தான் தற்போது இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருப்பதால் அரையிறுதி செல்ல வேண்டும் என்றால் நியூசிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிராக தோற்க வேண்டும்.

champions Trophy 2025 NZ vs Ban

இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும் வங்கதேசத்திற்கு ஆதரவாக இருந்தனர். இந்த சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணி பெரிய இலக்கை நிர்ணயித்து.

நியூசிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீரராக களம் இறங்கிய டன்ஷித் ஹசன் 24 ரன்களில் ஆட்டம் இழக்க, மெஹதி ஹசன் 13 ரன்களில் வெளியேறினார். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய தவ்ஹீத் 7 ரன்களிலும் முஸ்பிகுர் ரஹீம் இரண்டு ரன்களிலும், முகமதுல்லா நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

எனினும் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாந்தோ மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். 110 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள் விளாசி மொத்தம் 77 ரன்கள் சேர்த்தார். அதேபோன்று இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி இன்றைய ஆட்டத்தில் 45 ரன்கள் சேர்த்தார். ரிசாத் உசேன் 26 ரன்களும், டஸ்கின் அகமத் 10 ரன்களும் சேர்க்க வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் சேர்த்தது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு தரப்பில் பார்ட் டைம் சுழற் பந்துவீச்சாளரான மைக்கில் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இதேபோன்று வில்லியம் ரூக்கி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இதளையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. வில் யங் டக் அவுட்டாகியும், வில்லியம்சன் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா 112 ரன்களை சேர்த்தார். டாம் லாத்தம் அரைசதம் அடிக்க, நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரைவிட்டு வெளியேறியது.

Story first published: Monday, February 24, 2025, 18:40 [IST]
Other articles published on Feb 24, 2025
English summary
NZ vs Ban champions Trophy- New zealand Terrific Bowling Restricts Bangladesh in to low score
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+