Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs BAN: நீயெல்லாம் மனுஷனே இல்லை.. நியூசிலாந்து வீரர் ரச்சின் மிரள வைக்கும் செஞ்சுரி ரெக்கார்டு

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 105 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இது அவரது நான்காவது ஒரு நாள் போட்டி சதமாக அமைந்தது. இதில் உலகிலேயே எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத வியக்கத்தக்க சாதனை ஒன்றையும் அவர் படைத்து இருக்கிறார்.

ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் சதம் அடித்து இருந்த ரச்சின் ரவீந்திரா தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தனது முதல் போட்டியிலும் சதம் அடித்து இருக்கிறார். இந்த சாதனையை உலகிலேயே எந்த வீரரும் செய்யவில்லை. இதை செய்த ஒரே வீரர் ரச்சின் ரவீந்திரா மட்டுமே.

NZ vs BAN Rachin Ravindra s Century and Record-Breaking Feat in Champions Trophy

நியூசிலாந்து அணிக்காக ஐசிசி நடத்தும் ஒரு நாள் தொடர்களில் (ஒரு நாள் போட்டி உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி)அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா செய்திருக்கிறார். அவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த நான்கு சதங்களுமே ஐசிசி நடத்திய ஒரு நாள் போட்டி தொடர்களில் தான் அடிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், தான் அடித்த நான்கு ஒரு நாள் போட்டி சதங்களையும் ஐசிசி தொடர்களில் மட்டுமே ரச்சின் ரவீந்திரா அடித்து இருக்கிறார். இதுவும் வியக்கத்தக்க சாதனையாக அமைந்திருக்கிறது. இந்த சாதனை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரச்சின் ரவீந்திரா 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்து இருக்கிறார்.

ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

ரச்சின் ரவீந்திரா: 3 சதங்கள் (11 இன்னிங்ஸ்)
கேன் வில்லியம்சன்: 3 சதங்கள் (34 இன்னிங்ஸ்)
நாதன் ஆஸ்லே: 3 சதங்கள் (35 இன்னிங்ஸ்)
டேரில் மிட்செல்: 2 சதங்கள் (11 இன்னிங்ஸ்)
கிளென் டர்னர்: 2 சதங்கள் (14 இன்னிங்ஸ்)

வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிதானமாக விளையாடி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 77 ரன்கள் சேர்த்து இருந்தார். ஜாக்கர் அலி 45 ரன்கள் சேர்த்து இருந்தார்.

நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அடுத்து 237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி ஆடியது. அப்போது 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி தவித்தது. அப்போது ரச்சின் ரவீந்திரா அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 105 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். டாம் லாதம் 55 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Monday, February 24, 2025, 22:03 [IST]
Other articles published on Feb 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+