Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பதிலடி தந்த நியூசிலாந்து.. 141 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.. டிம் சௌதி அபார பந்துவீச்சு

லண்டன்: நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளராக மெக்குல்லம் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளதால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆண்டர்சன், பிராட் ஆகியோர் திரும்பினர்.

நியூசிலாந்து தடுமாற்றம்

நியூசிலாந்து தடுமாற்றம்

போட்டி தொடங்கியதும் ஆண்டர்சன் அபாரமாக பந்துவீசி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளித்தார். வில் யங் 1 ரன்னிலும், டாம் லாத்தம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் 2 ரன்களிலும், சிஎஸ்கே வீரர் கான்வே 3 ரன்களிலும் வெளியேற, நியூசிலாந்து அணி 12 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

132 ரன்களில் சுருண்டது

132 ரன்களில் சுருண்டது

காலின்டி கிராம் அதிகபட்சமாக 42 ரன்களும், டிம் சௌதி 26 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொதப்பியதால் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி தெனது முதல் இன்னிங்சை தொடங்கியது. சாக் கிராலி பொறுப்புடன் விளையாடி 43 ரன்களும், அலெக்ஸ் லிஸ் 25 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்த நிலையில், போப் 7 ரன்களிலும், பாரிஸ்டோ 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 11 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். புதிய கேப்டனாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி மேலும் 8 ரன்கள் சேர்ப்பதற்குள், அதாவது 100 ரன்களில் 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

பதிலடி தந்த நியூசிலாந்து

பதிலடி தந்த நியூசிலாந்து

இதனையடுத்து பிராட் 9 ரன்கள், ஆண்டர்சன் 7 ரன்களும், பார்கிசனும் 8 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 141 ரன்கள் எடுத்தது. இது நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 9 ரன்கள் மட்டுமே அதிகம். நியூசிலாந்து வீரர் டிம் சௌதி 4 விக்கெட்டுகளை எடுத்து கைப்பற்றினார்.

Story first published: Friday, June 3, 2022, 16:48 [IST]
Other articles published on Jun 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+