Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்டர்சன் உலகத்தர பந்துவீச்சு.. அடுத்தடுத்து ஆட்டமிழந்த நியூசிலாந்து..முதல் டெஸ்ட்டில் இங்கி. அபாரம்

லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

Recommended Video

ENG vs NZ : Lord's Test-ன் Day 1 Highlights | Anderson, Broad Strikes| Leach's Concussion | #Cricket

3 டெஸ்ட் போட்டி கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

கடந்த 2 மாதமாக ஐபிஎல் மயக்கத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டி விருந்து அளிக்க வந்துள்ளது.

புதிய தலைமை

புதிய தலைமை

தொடர் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர், கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் தங்களது பதவியிலிருந்து ராஜினாமா செய்தனர். இதனையடுத்து பென் ஸ்டோகஸ் கேப்டனாக பதவியேற்றார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்குல்லம் பொறுப்பு ஏற்று கொண்டார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆண்டர்சன் அபாரம்

ஆண்டர்சன் அபாரம்

இங்கிலாந்த அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஆண்டர்சன், பிராடு ஜோடி அணிக்கு திரும்பியது. போட்டி தொடங்கியதும் அனல் பறக்கும் வகையில் ஆண்டர்சன் பந்துவீசனார். ஆண்டர்சன் பந்துவீச்சுக்கு கொஞ்சம் கூட பேட்டால் இங்கிலாந்து வீரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. வில் யங் ஒரு ரன்னில் இருக்கும் போது ஆண்டர்சன் பந்துவீச்சில் பாரிஸ்டோவின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இதன் பின்னர் டாம் லாத்தமும் ஆண்டர்சன் பந்துவீச்சில் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதே போன்று பிராடும் மறு பக்கம், அனலை கக்க, சிஎஸ்கே வீரர் கான்வே 3 ரன்களில் பெவிலியன் நோக்கி திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், 2 ரன்களில் அறிமுக வீரர் பாட்ஸ் பந்துவீச்சில் வெளியேற, நியூசிலாந்து அணி 12 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

36 ரன்களுக்கு 6 விக்கெட்

36 ரன்களுக்கு 6 விக்கெட்

நியூசிலாந்த வீரர் டேரல் மிட்செல் கடுமையாக போராடிய 3 பவுண்டரி அடித்தார். எனினும் அவரும் பாட்ஸ் பந்துவீச்சில் 13 ரன்களில் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து டாம் பிளாண்டல் 14 ரன்களில் மீண்டும் பாட்ஸ் பந்துவீச்சல் கிளின் போல்ட்டாக, நியூசிலாந்த அணி 22 ஓவர் முடிலில் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Thursday, June 2, 2022, 18:17 [IST]
Other articles published on Jun 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+