Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீயெல்லாம் மனுஷனே இல்லை.. டெஸ்ட் போட்டியில் புதிய உச்சம் தொட்ட இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் தனது ஏழாவது டெஸ்ட் போட்டி சதம் அடித்து இருக்கிறார். மிக குறைந்த போட்டிகளில் ஏழு சதம் அடித்ததன் மூலம் அவர் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்.

22 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் ஹாரி ப்ரூக் ஏழாவது சதத்தை அடித்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 59.82 ஆகும். 22 போட்டிகளுக்கு பின்னரும் அவரது சராசரி அதிகமாக இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சமீப காலத்தில் இந்திய அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் வரிசையில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்கும் சிறந்த டெஸ்ட் வீரராக இடம் பெற்று இருக்கிறார்.

nz vs eng harry brook england

அதிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சதம் அடித்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 348 ரன்கள் அடித்தது. கேன் வில்லியம்சன் 93 ரன்கள் அடித்து இருந்தார். கிளென் பிலிப்ஸ் 58 ரன்களும், டாம் லாதம் 47 ரன்களும் எடுத்து இருந்தனர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அந்த அணி 200 ரன்களை எட்டுமா? என்ற கேள்வி இருந்த நிலையில் ஹாரி ப்ரூக் மற்றும் ஒல்லி போப் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தனர். ஒல்லி போப் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து பென் ஸ்டோக்ஸ்-உடன் இணைந்து அதிரடியாக ரன் சேர்த்தார் ஹாரி ப்ரூக். அவர் தனது ஏழாவது டெஸ்ட் சதத்தை 123 பந்துகளில் கடந்தார். அதன் பின்னரும் அவர் ஆட்டம் இழக்காமல் ரன் சேர்த்து ஆடினார். இங்கிலாந்து அணி 300 ரன்களை தாண்டி ரன் குவித்தது.

ஹரி ப்ரூக் சதம் அடித்து இருந்தபோது டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லையும் கடந்து இருந்தார். அவர் 22 டெஸ்ட் போட்டிகளில், 36 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 2000 ரன்களை கடந்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 59.82 ஆக உள்ள.து, அவர் ஏழு சதம் மற்றும் ஒன்பது அரை சதங்களை அடித்து இருக்கிறார். அதிகபட்சமாக 317 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

Story first published: Friday, November 29, 2024, 11:28 [IST]
Other articles published on Nov 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+