Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs ENG:16 ஆண்டுகள்.. சொந்த மண்ணிலேயே வீழ்ந்த நியூசிலாந்து அணி.. இங்கிலாந்து அணி மிரட்டல் சாதனை!

வெலிங்டன்: 16 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 280 ரன்களை விளாசியது.

new zealand vs england nz vs eng kane williamson joe root


இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் 155 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாட களமிறங்கிய இங்கிலாந்து அணி, 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 378 ரன்களை குவித்திருந்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தை ஜோ ரூட் - ஸ்டோக்ஸ் கூட்டணி தொடங்கியது.

அதிரடியாக விளையாடிய ஜோ ரூட், தனது 36வது டெஸ்ட் சதத்தை விளாசினார். அவர் 106 ரன்களில் ஆட்டமிழந்த பின், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 583 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் - கான்வே கூட்டணி களமிறங்கியது.

இதில் கான்வே டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த வில்லியம்சன் 4 ரன்களிலும், ரவீந்திரா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் டாம் லேதமும் 24 ரன்களில் ஆட்டமிழந்ததால், நியூசிலாந்து அணி 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மிட்சல் - பிளெண்டல் கூட்டணி சிறிது நேரம் போராடியது. பின்னர் மிட்சலும் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் டாம் பிளெண்டல் அதிரடியாக ரன்களை குவிக்க, நியூசிலாந்து அணி ஸ்கோர் விரைவாக எகிறியது. சிறப்பாக ஆடிய அவர் 102 பந்துகளில் 5 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 115 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் ஸ்மித் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 54.2 ஓவர்களில் 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன் காரணமாக இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் அபார சதம் விளாசிய ஹாரி ப்ரூக் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலமாக 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல் 16 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.

Story first published: Sunday, December 8, 2024, 11:08 [IST]
Other articles published on Dec 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+