Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

56 ரன்னுக்கு 6 விக்கெட்.. ஒற்றை ஆளாக நின்று சம்பவம் செய்த ஹாரி ப்ரூக்.. 32 ஆண்டு ரெக்கார்டு க்ளோஸ்!

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் புதிய வரலாற்றை படைத்துள்ளார். இங்கிலாந்து அணி சேர்த்த 223 ரன்களில் 135 ரன்களை ஹாரி ப்ரூக் எடுத்ததன் மூலமாக, இந்த புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஜேமி ஸ்மித் - பென் டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முதல் பந்திலேயே ஜேமி ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, அடுத்ததாக டக்கெட் 2 ரன்களில் வெளியேறினார்.

Harry Brook Creates History

தொடர்ந்து வந்த ரூட் 2 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த பெத்தெல் 2, பட்லர் 4 மற்றும் சாம் கரண் 6 ரன்களில் வெளியேறினர். இதனிடையே ஹாரி ப்ரூக் மட்டும் அதிரடியாக ரன்களை சேர்த்து வந்தார். இதனால் இங்கிலாந்து அணி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின் ஹாரி ப்ரூக் - ஜேமி ஓவர்டன் இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர். ஹாரி ப்ரூக் சிக்சர்களாக அடித்து பறக்கவிட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பின்னர் ஓவர்டன் 46 ரன்களில் வெளியேற, டெய்லண்டர்களை எதிரில் வைத்து கொண்டு ஹாரி ப்ரூக் ஒன் மேன் ஷோ காட்டினார்.

சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை 82 பந்துகளில் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர், 101 பந்துகளில் 11 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 135 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 35.2 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 60.53 சதவிகித ரன்களை ஹாரி ப்ரூக் விளாச் இருக்கிறார்.

இதன் மூலமாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் 32 ஆண்டு கால சாதனையை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளர். இதன் முன்பாக 1993ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் சேர்த்திருந்து. அப்போது ராபின் ஸ்மித் 167 ரனளை எடுத்து 60.28 சதவிகித ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. இதனை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார்.

மேலும், 224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 36.4 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய மிட்சல் 78 ரன்களையும், பிரேஸ்வெல் 51 ரன்களையும் விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

Story first published: Sunday, October 26, 2025, 16:11 [IST]
Other articles published on Oct 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+