Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs ENG: 8வது சதம்.. இங்கிலாந்தை ஒற்றை வீரராக காப்பாற்றிய ஹாரி ப்ரூக்.. பாவம் நியூசிலாந்து அணி!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் தனது 8வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

new zealand vs england nz vs eng kane williamson harry brook


பின்னர் இங்கிலாந்து அணி தரப்பில் கிராலி - டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் டக்கெட் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான கிராலி 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ரூட் 3 ரன்களிலும், பெத்தல் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் இளம் வீரர் ஹாரி ப்ரூக் - போப் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதிரடியாக ஆடிய இருவரும் விரைவாக ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் 47 பந்துகளில் ஹாரி ப்ரூக் அரைசதம் கடக்க, மறுமுனையில் போப் 65 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்து சென்றது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் 91 பந்துகளில் சதத்தை விளாசி சாதனை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாரி ப்ரூக் அடிக்கும் 8வது சதம் இதுவாகும். இறுதியாக ஹாரி ப்ரூக் 115 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இதுவரை 6 இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய ஹாரி ப்ரூக் 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை விளாசி இருக்கிறார். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் ஒற்றை வீரராக ஹாரி ப்ரூக் இங்கிலாந்து அணியை காப்பாற்றி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

Story first published: Friday, December 6, 2024, 13:46 [IST]
Other articles published on Dec 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+