Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 ரன்களில் மிஸ்ஸான சதம்.. சோகமாக நடந்து சென்ற வில்லியம்சன்.. முதல் நாளில் அசத்திய நியூசிலாந்து!

கிறிஸ்ட்சர்ச்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 93 ரன்களில் ஆட்டமிழந்து 7 ரன்களில் சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு காயத்தில் இருந்து குணமடைந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார்.

new zealand vs england nz vs eng kane williamson ben stokes

இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் டாம் லேதம் - கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கான்வே 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் களம் புகுந்தார். வில்லியம்சன் - லேதம் இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில், லேதம் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த ரச்சின் ரவீந்திரா நிதான ஆட்டத்தை ஆட, வில்லியம்சன் ரன் குவிப்பை விரைவுபடுத்தினார். பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 34 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் டேரல் மிட்சல் களம் புகுந்தார். இவர் ஒரு பக்கம் நிதானம் காட்ட, வில்லியம்சன் அரைசதம் கடந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.

கம்பேக் போட்டியிலேயே சிறப்பாக ஆடிய வில்லியம்சன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 93 ரன்களில் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 197 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 93 ரன்கள் எடுத்து சதத்தை மிஸ் செய்ததால், பெவிலியனுக்கு சோகமாக நடந்து சென்றார். பின்னர் வந்த வீரர்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார்.

இதனால் முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளரான சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், அட்கின்சன் மற்றும் பிரைடன் கர்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்படும் என்பதால், யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Story first published: Thursday, November 28, 2024, 12:49 [IST]
Other articles published on Nov 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+