Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதான்டா கம்பேக்.. சரித்திரம் படைத்த கேன் வில்லியம்சன்.. பிரம்மாண்ட மைல்கல் சாதனை.. 9000 ரன்கள்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் கேன் வில்லியம்சன் தனது காயத்திற்கு பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். சில மாதங்களுக்கு பின் கிரிக்கெட் விளையாட வந்த அவர் முதல் போட்டியிலேயே இரண்டு அரை சதம் அடித்ததோடு, மாபெரும் மைல்கல் சாதனையை படைத்தார்.

நியூசிலாந்து அணிக்காக 9,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் எடுத்த கேன் வில்லியம்சன், இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணிக்காக 9,000 டெஸ்ட் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

nz vs eng kane williamson new zealand


நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராகவும் இருக்கிறார் கேன் வில்லியம்சன். இரண்டாவது இடத்தில் ராஸ் டெய்லர் இருக்கிறார். அவர் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 7,683 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் தற்போது கிரிக்கெட்டில் ஃபேப் ஃபோர் (Fab Four) என அழைக்கப்படும் நான்கு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் நான்காவதாக 9,000 ரன்களை கடந்து இருக்கிறார் கேன் வில்லியம்சன்.

ஃபேப் ஃபோரில் இடம் பெற்றுள்ள நான்கு வீரர்களும் தற்போது 9,000 ரன்களை கடந்து உள்ளனர்.

ஃபேப் ஃபோரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மற்றும் அவர்களின் ரன்கள் -

ஜோ ரூட் - 12,754 ரன்கள்

ஸ்டீவ் ஸ்மித் 9,702 ரன்கள்

விராட் கோலி - 9,175 ரன்கள்

கேன் வில்லியம்சன் - 9.035 ரன்கள்

விராட் கோலி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். அதே போல கேன் வில்லியம்சன் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளார். இவர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் முந்த வாய்ப்பு உள்ளது என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இவர்களுக்கு இடையிலான பந்தயத்தை பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இதுவரை நடந்தவை -

முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து அணி 348 ரன்களும், இங்கிலாந்து அணி 499 ரன்களும் எடுத்து உள்ளன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து உள்ளது. நியூசிலாந்து அணி 2 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.

Story first published: Saturday, November 30, 2024, 11:11 [IST]
Other articles published on Nov 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+