Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை சுளுக்கு எடுத்த நியூசிலாந்து! வெற்றியுடன் சென்ற சவுதி! WTC Table- இந்தியாவுக்கு சிக்கலா?

ஹாமில்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் தடுமாறி வருகிறது. குறிப்பாக இந்திய அணி கிரிக்கெட்டில் இளவரசர் என்று அழைக்கப்படும்,கில் SENA நாடுகள் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா ஆகிய மன்களில் தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.

புஜாரா, ரகானே போன்ற அனுபவ வீரர்கள் நீக்கப்பட்டு இளம் வீரர்களை ஊக்கிவிக்கும் விதமாக சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதில் கில் இந்திய மண்ணில் நன்றாக விளையாடி வரும் நிலையில் சேனா நாடுகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

nz vs eng tim southee kane williamson new zealand vs england

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்களால் நம்பப்பட்ட கில் ரெக்கார்டுகள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருக்கிறது. சேனா நாடுகளில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 27 இன்னிங்ஸ் விளையாடியுள்ள கில் வெறும் 646 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 25.8 என்ற அளவில் இருக்கிறது.

இதில் மூன்று அரைசதம் மட்டும்தான் அடித்திருக்கிறார். சதம் பூஜ்ஜியம்.இதில் இதுவரை சொந்த மண்ணில் ஒன்பது சதமும் ஆசியாவுக்கு வெளியே ஜிம்பாப்வே மண்ணில் ஒரு சதமும் கில் அடித்திருக்கிறார். சேனா நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 இன்னிங்ஸ் விளையாடி 26.72 என்ற அளவிலே சராசரி வைத்திருக்கிறார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இனியும் கில் வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் இனி கேப்டனான ரோகித் சர்மா சேனா நாடுகளில் 47 இன்னிங்ஸ் விளையாடி சராசரியாக 29.20 வைத்திருக்கிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்திய அணிக்காக கடைசியாக 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் சேனா நாடுகளில் 16 இன்னிங்ஸ் விளையாடி 30.61 என்ற அளவில் பேட்டிங்கில் சராசரி வைத்திருக்கிறார்.

ஆனால் அவர்களை விட ரோகித் சர்மாவும் கில்லும் குறைந்த சராசரியை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. புஜாரா, ரகானே போன்ற வீரர்களை நீக்கியதற்கு பதில் இந்த இரண்டு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்திருக்கக் கூடாது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் எதிர்கால பேட்டிங் தரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

Story first published: Tuesday, December 17, 2024, 8:47 [IST]
Other articles published on Dec 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+