Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்னஸ் டெஸ்ட்டை கிளியர் பண்ணியாச்சு... அடுத்தது என்ன நியூசிலாந்து டெஸ்ட்தான்

Recommended Video

IND VZ NZ TEST SERIES | New Zealand announce their squad for India Tests

பெங்களூரு : வலது கணுக்காலில் காயமேற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய பௌலர் இஷாந்த் சர்மா, என்சிஏவின் பிட்னஸ் டெஸ்ட்டில் தேறியுள்ளதையடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

நியூசிலாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மோதவுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன.

ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல்லி அணி சார்பில் போட்டியிட்ட இஷாந்த் சர்மாவிற்கு, விதர்பா அணிக்கு எதிராக மோதிய ஆட்டத்தில் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆறு வாரங்கள் அவர் ஓய்வெடுக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

இஷாந்த் சர்மா காயம்

இஷாந்த் சர்மா காயம்

ரஞ்சிக் கோப்பை போட்டிக்காக கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி அணி சார்பில் களமிறங்கிய இஷாந்த் சர்மா, விதர்பா அணிக்கு எதிராக மோதினார். அப்போது ஒரு பந்தை எதிர்கொண்டபோது அவருக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் 6 வார காலங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.

நியூசிலாந்து டெஸ்ட்டில் விளையாட்டு

நியூசிலாந்து டெஸ்ட்டில் விளையாட்டு

இந்நிலையில் நேற்று என்சிஏவில் நடைபெற்ற பிட்னஸ் தேர்வில் கலந்துகொண்ட இஷாந்த் சர்மா அதில் தேறியுள்ளார். இதையடுத்து நியூசிலாந்திற்க எதிராக வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா இணைந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் தற்போது கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மா மகிழ்ச்சி

இந்நிலையில் தான் பிட்னஸ் பரிசோதனையில் தேர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருந்த என்சிஏ தலைவர் ஆஷிஷ் கௌசிக்கிற்கு இஷாந்த் சர்மா டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தனக்கு நடத்தப்பட்ட ஸ்கேன்கள் அச்சத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ள இஷாந்த் சர்மா, ஆனால் என்சிஏ டெஸ்ட்டில் தான் பிட்னசுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

21ம் தேதி துவக்கம்

21ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி துவங்கி 25ம் தேதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 29ம் தேதி துவங்கி மார்ச் 4ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிகளை பெறுவதற்காக இந்த போட்டிகளில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

Story first published: Sunday, February 16, 2020, 14:58 [IST]
Other articles published on Feb 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+