Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி!

Recommended Video

உலக கோப்பையில் முதல் தோல்வி... பாகிஸ்தானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து

பிர்மிங்காம் : 2019 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதுவரை லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வலம் வந்த நியூசிலாந்து அணி தன் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி சதம் கடந்தார் பாபர் ஆசாம். அதுவே வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. நியூசிலாந்து அணியின் நீஷம் போராடி 97 ரன்கள் குவித்தது வீணானது.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எனினும், அது தவறான முடிவாக மாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குப்டில் 5, மன்றோ 12 ரன்களுக்கு இழந்து ஏமாற்றத்துடன் போட்டியை துவக்கியது.

4 விக்கெட்கள் காலி

4 விக்கெட்கள் காலி

அதன் பின் ராஸ் டெய்லர் 3 ரன்களிலும், டாம் லாதம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 46 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நியூசிலாந்து, அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனை 41 ரன்கள் எடுத்த நிலையில் இழந்தது.

நீஷம் அதிரடி

நீஷம் அதிரடி

அதன் பின் ஜோடி சேர்ந்த நீஷம் - கிராண்ட்ஹோம் போட்டியை மாற்றினர். நீஷம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த கிராண்ட்ஹோம் 64 ரன்கள் குவிக்க, பெரும் சரிவில் இருந்து மீண்ட நியூசிலாந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஷஹீன் ஷா அசத்தல்

ஷஹீன் ஷா அசத்தல்

பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். எனினும், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை கொடுத்ததால், நியூசிலாந்து சரிவில் இருந்து மீண்டது.

துவக்கம் மோசம்

துவக்கம் மோசம்

பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்கள் என்ற இலக்கு எளிய இலக்காகவே கருதப்பட்டது. ஆனால், துவக்க வீரர்கள் இமாம் 19, பாக்கர் சமான் 9 ரன்களில் ஆட்டமிழந்து, போட்டியை நியூசிலாந்து அணிக்கு சாதகமாக மாற்றினர்.

பாபர் ஆசாம் சதம்

பாபர் ஆசாம் சதம்

பாபர் ஆசாம் ஒருபுறம் நங்கூரம் போட்டு நிதானமாக பேட்டிங் செய்து தன் 10வது ஒருநாள் போட்டி சதம் கடந்தார். ஹபீஸ் 32, ஹாரிஸ் சோஹைல் 68 ரன்கள் குவித்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். பாகிஸ்தான் அணி இடை இடையே பவுண்டரி அடித்துக் கொண்டே வந்தது அந்த அணியை ரன் ரேட் அழுத்தத்தில் இருந்து காப்பாற்றியது.

வாய்ப்பு

வாய்ப்பு

49.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது பாகிஸ்தான். 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. பாகிஸ்தான் இந்த வெற்றி மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நியூசிலாந்து அணி தன் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

Story first published: Thursday, June 27, 2019, 0:33 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+