Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நியூசிலாந்தை ஜெயிப்பது போல சென்ற பாகிஸ்தான் ஆனா”.. 33 பந்தில் காலியான பேட்டிங்.. NZ வெற்றி

நேப்பியர்: பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்துவது போல சென்றது. பின்னர் வழக்கம் போல பாகிஸ்தான் அணி மிகப்பெரிய பேட்டிங் சரிவை சந்தித்தது.

38.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 249 ரன்கள் சேர்த்திருந்த பாகிஸ்தான் அணி, 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. 33 பந்துகளில் 7 விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான். இதை அடுத்து நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Pakistan New Zealand ODI Cricket Batting Collapse

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி இருந்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் நான்காம் வரிசை வீரர் மார்க் சாப்மேன் 111 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்திருந்தார்.

ஐந்தாம் வரிசையில் இறங்கிய டேரில் மிட்செல் 84 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். முகமது அப்பாஸ் 26 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், இந்த மூன்று பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 344 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு 345 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.

அடுத்து சேஸிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் உஸ்மான் கான் நல்ல துவக்கம் அளித்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. உஸ்மான் கான் 33 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்துல்லா ஷஃபிக் 49 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆடிய போது எதிர்பார்த்ததை போலவே பாகிஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகம் சரிவை சந்தித்தது. பாபர் அசாம் எப்போதும் போல நிறைய பந்துகளை வீணடித்தார். அவர் 83 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பாபர் அசாம் 39-வது ஓவரில் ஆட்டமிழந்ததை அடுத்து பாகிஸ்தான் அணி மிகப் பெரிய சரிவை சந்தித்தது. சல்மான் அலி ஆகா ஒருபுறம் நின்று அதிரடியாக ஆடினார். 48 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். ஆனால், கடைசி ஆறு பேட்ஸ்மேன்களில் மூவர் தலா ஒரு ரன்னும், மற்ற மூவர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதை அடுத்து பாகிஸ்தான் அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் நேதன் ஸ்மித் நான்கு விக்கெட்களையும், ஜேக்கப் டஃபி இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். வில்லியம் ஓ'ரூர்க், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் முகமது அப்பாஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகமது அப்பாஸ் தனது அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்து, 1 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 29, 2025, 12:49 [IST]
Other articles published on Mar 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+