Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs SA: ஆட்டநாயகன் வென்ற சிஎஸ்கே சிங்கம்.. 350 ரன்கள் மேல் நினைக்கவே இல்ல.. ரச்சின் ரவீந்திரா கருத்து

துபாய்: ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் அரையிறுதி சுற்றில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் பந்துவீச்சிலும் ரச்சின் ரவீந்திரா ஐந்து ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன் மூலம் ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவிந்தரா, "அணியின் வெற்றிக்காக பங்காற்றுவது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுவும் அரையிறுதியில் நான் அணியில் வெற்றிக்கு ரன்கள் சேர்த்திருக்கிறேன் நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்."

Champions Trophy 2025 NZ vs SA

"நான் இன்று ஆட்டத்தில் முதலில் சரியாக விளையாடவில்லை என்று நினைக்கின்றேன். நான் நினைத்தபடி ரன்கள் சேர்க்கவில்லை. தென்னாப்பிரிக்க வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். ஆனால் ரன்கள் கொஞ்சம் கிடைக்க தொடங்கியதில் இருந்து நானும் வில்லியம்சனும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம்."

"அதன் பிறகு களத்தில் அனைத்தும் எனக்கு சாதகமாக நடந்தது. நான் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்கள் அணிக்கு மிகவும் உதவியது என நினைக்கின்றேன். ஒரு கட்டத்தில் நாங்கள் 300 ரன்களை எட்டுவது குறித்துதான் யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் வில்லியம்சன் தான் அது போதாது என வேகமாக அடித்து ஆடினார்.
அதன் பிறகு பிலிப்ஸ் மற்றும் டாரல் மிட்செல் ஆகியோர் அதிரடியை காட்டியதால் நாங்கள் 350 ரன்களுக்கு மேல் சென்றோம்."

"இது போன்ற தொடரில் அடுத்தது என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். நிச்சயமாக இன்றைய வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம். ஆனால் துபாய்க்கு சென்றவுடன் இந்திய போட்டி குறித்து நாங்கள் யோசிக்க தொடங்கி விடுவோம்" என்று ரச்சின் ரவிந்தா தெரிவித்துள்ளார். ரச்சின் ரவீந்தரா சிஎஸ்கே அணி வீரர் என்பதால் அவர் பார்முக்கு திரும்பி இருப்பது என்று நினைத்து சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

Story first published: Wednesday, March 5, 2025, 23:44 [IST]
Other articles published on Mar 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+