Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs SA: நாங்களே வெற்றிக்கு வழி கொடுத்து விட்டோம்.. நான் சதம் அடித்திருக்கனும்.. SA பெவுமா பேச்சு

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிச்சுற்றுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடரில் போட்டியில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை மோதி இருக்கிறது.

இதில் 1998 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான மட்டுமே தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை ஒன்பது அரை இறுதியில் தோல்வியும்,ஒரு அரை இறுதி டிராவும் ஆகி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் அரை இறுதி போட்டிகளில் அதிக முறை தோல்வியை தழுவிய அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்க அணி பெற்றிருக்கிறது.

Champions Trophy 2025 NZ vs SA

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாபிரிக்க அணி கேப்டன் தெம்பா பெவுமா, "360 ரன்கள் அடித்தது இந்த ஆடுகளத்தில் ஒரு நல்ல ஸ்கோர் தான். இதுவே ஒரு 350 ரன்கள் என்ற இலக்கு இருந்திருந்தால் கூட நாங்கள் இந்த ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பி இருப்போம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்கள் அணியில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தோம்."

"ஆனால் நானோ அல்லது வெண்டர் டூசன் களத்தில் கடைசி வரை நின்று இருந்து நியூசிலாந்து வீரர்கள் போல் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எங்களை கடும் அழுத்தத்தில் நியூசிலாந்து பவுலர்கள் வைத்திருந்தார்கள். ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெடுகள் இழந்தோம்."

"இதன் மூலம் கடைசியில் வரும் வீரர்கள் பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இனி வரும் காலங்களில் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் இருக்க வேண்டும். எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது. ஆட்டத்தில் இருக்கும் முக்கிய தருணங்களை சரியாக பயன்படுத்தினாலே நம்மால் வெற்றி பெற முடியும்" என்று தென்னாபிரிக்க அணி கேப்டன் பெவுமா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 5, 2025, 23:16 [IST]
Other articles published on Mar 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+