Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs SA: இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி.. 33 பந்துகளில் ஆலன் சதம்.. தென்னாப்பிரிக்கா படுதோல்வி

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி வெறும் 12.5 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது.

போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தென்னாப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்தார். தென்னாப்பிரிக்க அணி தடுமாறிய நிலையில், மார்கோ ஜான்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து, 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் தனது அணியின் ஸ்கோரை 169 ரன்களாக உயர்த்த உதவினார். நியூசிலாந்து தரப்பில் கோல் மெக்கான்சி, மாட் ஹென்றி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

170 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்பெர்ட் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். ஃபின் ஆலன் வெறும் 19 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை கடந்தார். அடுத்து, டிம் செய்பெர்ட்டும் 28 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். இந்த இணையின் மின்னல் வேகமான ஆட்டத்தால், நியூசிலாந்து அணி 100 ரன்களை அதிவிரைவில் கடந்து வெற்றிப் பாதைக்கு அடியெடுத்து வைத்தது.

117 ரன்கள் எடுத்திருந்தபோது, நியூசிலாந்தின் வலுவான தொடக்க பார்ட்னர்ஷிப்பை ககிசோ ரபாடா உடைத்தார். அபாரமாக ஆடிய டிம் செய்பெர்ட் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். இதற்கிடையில், ஃபின் ஆலனுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் சிகிச்சை பெற்றார். எனினும், மீண்டும் களத்திற்கு வந்த அவர் தனது துரித ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

ஆட்டத்தின் கடைசிப் பகுதியில், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை ஃபின் ஆலன் நிலைகுலையச் செய்தார். குறிப்பாக மார்கோ ஜான்சனின் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். அதில் ஒரு அற்புதமான சிக்ஸர் ஹூக்ளி நதியில் விழுந்து புதிய பந்து கோரப்பட்டது. 32 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு சிக்ஸர் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்து, வெறும் 33 பந்துகளில் தனது அபார சதத்தை பதிவு செய்து நியூசிலாந்து அணியின் மகத்தான வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து அணி வெறும் 12.5 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, தங்கள் நீண்டகால சாம்பியன் பட்ட ஏக்கத்தை நிறைவு செய்யும் முயற்சியில் ஒரு படி முன்னேறியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

Story first published: Wednesday, March 4, 2026, 22:08 [IST]
Other articles published on Mar 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+