Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

92 ஆண்டு வரலாற்றில் முதல் முறை.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் தொடரை பதிவு செய்த நியூசிலாந்து

NZ vs SA : தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை இதுவரை ஒரு முறை கூட நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் வென்றதில்லை.

92 ஆண்டுகளாக இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதி இருக்கிறது. இதில் அனைத்துமே தென்னாப்பிரிக்கா தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இம்முறை எஸ் ஏ 20 தொடர் நடைபெற்றதால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் பலரும் நியூசிலாந்துக்கு செல்லவில்லை.

NZ vs SA - Newzealand created the 92 year old record by winning 1st test series vs Proteas

இதனால் இரண்டாம் தர அணியை தேர்வு செய்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுப்பி தற்போது சறுக்கி இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி ஏற்கனவே வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் ரூவான் டி ஸ்வார்ட் அதிகபட்சமாக 64 ரன்கள் டேவிட் பெட்டிங்கம் 39 ரன்களும் எடுக்க தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து தங்களது முதல் களமிறங்கிய நியூஸிலாந்து வீரர் டாம் லாத்தம் 40 ரன்கள், வில்லியம்சன் 43 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் நியூசிலாந்து அணி 211 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 31 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. முன் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அந்த அணியின் டேவிட் பெட்டிங்கமை மட்டும் அபாரமாக விளையாடி 110 ரன்கள் விளாசினார்.

இதில் 12 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். கீகள் பீட்டர்சன் 43 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 235 ரன்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதனை அடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. சவாலான இலக்கை தென்னாபிரிக்கா எடுத்து இருந்ததால் இந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் .
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர்கள் அபாரமாக விளையாடி வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

டாம் லாத்தம் 30 ரன்களும் , கான்வே 17 ரன்களும் எடுக்க அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அபாரமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய விக்கெட்டை எடுக்க முடியாமல் தென்னாபிரிக்க வீரர்கள் திணறினர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 260 பந்துகளை எதிர் கொண்ட வில்லியம்சன் 133-ரன்கள் சேர்த்தார். அவருக்கு வில் யங் நல்ல துணையாக இருந்து 60 ரன்கள் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கு எட்டி தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளி பட்டியலில் நியூசிலாந்த அணி தற்போது முதல் இடத்திற்கு சென்று இருக்கிறது.

Story first published: Friday, February 16, 2024, 12:46 [IST]
Other articles published on Feb 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+