Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs SA: அறைவாங்கியது போல் இருக்கு.. அரையிறுதியில் சோக் ஆன தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்கரம் கருத்து

கொல்கத்தா: டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற படுதோல்வி "முகத்தில் அறை வாங்கியது போல" இருப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் வருத்தம் தெரிவித்தார். இந்த உலகக் கோப்பையில் ஒரு ஆட்டம் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய தங்கள் அணிக்கு இது ஒரு "மோசமான இரவாக அரையிறுதி அமைந்தது என அவர் குறிப்பிட்டார். நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை மிக எளிதாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் மார்க்ரம் பேசுகையில், "இது மிகுந்த ஏமாற்றம். ஒரு பெரிய அடியாக இல்லாவிட்டாலும், அப்படி உணர்த்துகிறது. இந்தக் தோல்வியால் நாங்கள் மேம்பட்டு, அடுத்த ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்" என்றார்.

{image-NZ vs SA-04-2026-000485b-jpg-1772647533318_1772647535014-600x338.jpg tamil.mykhel.com}

190 ரன்கள் அடித்திருக்கனும்

ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் "மிகவும் சிறப்பாக செயல்படும்" என எதிர்பார்த்ததாகவும், பேட்ஸ்மேன்கள் சற்று "பாரம்பரிய அணுகுமுறையை" பின்பற்றியிருந்தால், 190 ரன்களை எட்டியிருக்கலாம் எனவும் மார்க்ரம் தெரிவித்தார். ஆனால், தென் ஆப்பிரிக்கா 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஃபின் ஆலனின் அதிரடி சதத்தின்உதவியுடன் நியூசிலாந்து 13 ஓவர்களுக்குள்ளாகவே இலக்கை எளிதாக எட்டியது.

ஆடுகளம் சிறப்பாக இருந்தபோதும், பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் விரைவாக சூழ்நிலைக்கு ஏற்ப பழகி, 190 ரன்களை எட்ட கடுமையாகப் போராடியிருந்தால், ஆட்டத்தில் இருந்திருக்கலாம் என்று மார்க்ரம் குறிப்பிட்டார். "இந்த முடிவு ஏமாற்றம் அளித்தாலும், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அணியை பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது உண்மையிலேயே ஒரு துரதிர்ஷ்டவசமான மாலை" என்று அவர் மேலும் கூறினார்.

முதலில் பேட் செய்ய பணிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா, பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. ஆனால், ஆட்டத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட தொடர் விக்கெட் வீழ்ச்சி அணியை பாதித்தது. 55 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையிலிருந்து 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சறுக்கியது. ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் மற்றும் டேவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் முறையே ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் பவுண்டரி அருகே மற்றும் கவர் பகுதியில் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

நியூசிலாந்துக்கு பாராட்டு

"அவர்கள் ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்து எதிர்பார்த்தது போல் பேட்டிற்கு வரவில்லை. சில பந்துகள் பிட்ச்சில் நின்று போயின. சில பந்துகள் பேட்டில் மிகவும் குறைவாகப் பட்டன, இதனால் ரன் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் மூலம் அழுத்தம் அதிகரித்து, துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டுகளை இழந்தோம். எனவே, அந்த பந்துவீச்சுப் பிரிவுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்" என்று மார்க்ரம் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைப் பாராட்டினார்.

இக்கட்டான சூழ்நிலையில் 7வது வீரராக களமிறங்கிய மார்கோ ஜான்சென், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸுடன் இணைந்து 73 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை 150-க்கு கொண்டு சென்றார். ஜான்சென் 27 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து, ஐந்து சிக்ஸர்களுடன் துணிச்சலுடன் எதிர்த்தாக்குதல் நடத்தினார்.

ஆனால், நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் 47 பந்துகளில் 100 ரன்களைக் குவித்து, தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தை மீட்டெடுப்பது "மிகவும் கடினமாகி விட்டது" என்று மார்க்ரம் ஒப்புக்கொண்டார். "170 ரன்களை எட்டியது ஒரு சிறந்த முயற்சிதான். ஆனால், அவர்களின் பவர்ப்ளே சிறப்பான துவக்கம் பெற்றது. ஒவ்வொரு பவுண்டரியையும் காப்பாற்ற இயலவில்லை."

மோசமான இரவு

"ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபர்ட் ஆகியோர் ஆட்டத்தை மிக விரைவாக முடித்ததற்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இது எங்களுக்கு ஒரு மோசமான இரவு" என்று மார்க்ரம் கூறினார். இந்தத் தோல்விக்குப் பிறகு, அணியின் "உணர்ச்சிகள் முதலில் தணியட்டும்" என்றும், அதன் பிறகு இந்த ஆட்டத்தை முழுமையாகப் ஆய்வு செய்து, என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிவோம் என்றார்.

"ஆட்டத்தை ஆய்வு செய்து, எந்தப் பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்பதைக் கண்டறிவதுதான் எங்களது அடுத்த பணி. ஒரு குழுவாகவும், தனிநபர்களாகவும் மீண்டும் களமிறங்கி மேம்பட முயற்சிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது எங்களுக்கு நல்ல நிலையை உருவாக்கும் என்று நம்புகிறேன்" என்று மார்க்ரம் கூறினார்.

Story first published: Wednesday, March 4, 2026, 23:45 [IST]
Other articles published on Mar 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+