Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs UAE: ஒரு விக்கெட் கூட போகலை.. 25 பவுண்டரி அடித்து UAE அணியை கதறவிட்ட நியூசிலாந்து ஜோடி

சென்னை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரக அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் ஜோடி 175 ரன்கள் குவித்து, டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே எந்தவொரு விக்கெட்டுக்கும் அமைக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

குரூப் டி பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமீரக அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அமீரக அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. விக்கெட் கீப்பர் ஆர்யன்ஷ் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் முகமது வாசிம் மற்றும் அலிஷான் ஷராஃபு ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திறம்பட எதிர்கொண்டது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்குச் சதம் கடந்து அசத்தியது.

NZ vs UAE New Zealand huge record in T20 World Cup 2026 Tim Seifert Finn Allen scored 175-Run Against UAE

முகமது வாசிம் 45 பந்துகளில் 66 ரன்களும், அலிஷான் ஷராஃபு 47 பந்துகளில் 55 ரன்களும் குவித்தனர். கடைசி நேரத்தில் மயங்க் குமார் 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் அமீரக அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அமீரக அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

சென்னையில் சிக்ஸர் மழை

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் பந்திலிருந்தே இந்த ஜோடி அமீரக பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

பவர் பிளே ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களைக் குவித்தது. டிம் செய்ஃபெர்ட் வெறும் 23 பந்துகளிலும், ஃபின் ஆலன் 27 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். அமீரக பந்துவீச்சாளர்களால் இவர்களைப் பிரிக்கவே முடியவில்லை.

இறுதியில் நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் நியூசிலாந்து வெற்றியை வசப்படுத்தியது. டிம் செய்ஃபெர்ட் 42 பந்துகளில் 12 ஃபோர், 3 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபின் ஆலன் 50 பந்துகளில் 5 ஃபோர், 5 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து மொத்தமாக 25 பவுண்டரிகள் அடித்து இருந்தனர்.

முறியடிக்கப்பட்ட சாதனைகள்

உலக சாதனை பார்ட்னர்ஷிப்

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அமைக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும் (175*). இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி குவித்த 170 ரன்களே சாதனையாக இருந்தது.

விக்கெட் இழக்காமல் சேஸிங்

சர்வதேச டி20 போட்டிகளில் 150 ரன்களுக்கு மேலான இலக்கை விக்கெட் இழக்காமல் சேஸ் செய்வது இது 6வது முறையாகும். இதில் நியூசிலாந்து அணி மட்டும் 2 முறை (பாகிஸ்தானுக்கு எதிராக 2016ல், தற்போது அமீரகத்திற்கு எதிராக) இந்தச் சாதனையைச் செய்துள்ளது. மேலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இது 7வது 10 விக்கெட் வெற்றியாகும்.

சிக்ஸர் மன்னர்கள்

இந்தப் போட்டியின் மூலம் ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகிய இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் தலா 100 சிக்ஸர்களைப் பூர்த்தி செய்துள்ளனர். மார்ட்டின் கப்டில் (173), காலின் முன்ரோ (107), கிளென் பிலிப்ஸ் (101) ஆகியோருக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய நியூசிலாந்து வீரர்கள் இவர்களே. இந்த அபார வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தனது நெட் ரன் ரேட்டை வெகுவாக உயர்த்திக்கொண்டுள்ளது.

Story first published: Tuesday, February 10, 2026, 18:59 [IST]
Other articles published on Feb 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+